பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள் ஆனால் பீகாரில் உள்ள பெட்டியாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு 1 வயது குழந்தை ஒரு விஷ நாகப்பாம்பை பற்களால் கடித்துவிட்டது. இதனால் பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்தது. கடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, குழந்தையும் மயக்கமடைந்தது.
பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் மஜ்ஹௌலியா தொகுதியில் உள்ள மொஹாச்சி பங்கட்வா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. குழந்தை மயக்க நிலையில் மஜ்ஹௌலியா ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டது. அங்கு முதலுதவிக்குப் பிறகு, பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (GMCH) பரிந்துரைக்கப்பட்டது.
சுனில் சாவின் 1 வயது மகன் கோவிந்தா வெள்ளிக்கிழமை மதியம் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் வீட்டில் இரண்டு அடி நீளமுள்ள நாகப்பாம்பு வெளியே வந்ததாக பாட்டி மாதேஸ்வரி தேவி கூறினார். குழந்தை ஒரு பொம்மை என்று நினைத்து பாம்பைப் பிடித்தது. பின்னர் அதை தனது பற்களால் கடித்தது. இதன் பின்னர் விரைவில் நாகப்பாம்பு இறந்தது. குழந்தை பாம்பைக் கடித்ததில் பாம்பு இரண்டு துண்டுகளாக ஆனதாகவும் கூறப்படுகிறது.
குழந்தையின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் GMCH மருத்துவர்கள் தெரிவித்தனர். GMCH மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் திவாகந்த் மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது, குழந்தைக்கு விஷம் கலந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல்நிலை ஆபத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் அச்சமடைந்தனர். அதே நேரத்தில், குழந்தை கடித்ததால் பாம்பு இறந்தது குறித்து மக்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.” என்று தெரிவித்தார்.
கோவிந்தாவின் தாய் அருகில் விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, பாம்பு அருகில் வந்தது என்று குழந்தையின் பாட்டி மாதேஸ்வரி தேவி கூறினார். “பாம்பு வெளியே வந்தது, குழந்தை அதை ஏதோ ஒன்றால் தாக்கி, பின்னர் கடித்து கொன்றது.. அந்தக் குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது,” என்று அவர் கூறினார்.