இன்றைய நவீன காலக்கட்டத்தில் கருத்தரித்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது, மரபணு காரணிகள், மது அருந்துதல், புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் பருமன் என பல காரணங்களை சொல்லலாம்.. உடனடியாக கருத்தரிப்பது எப்படி என்பது குறித்து பல தகவல்கள் மற்றும் கட்டுக்கதைகள் இணையத்தில் பரவி வருகின்றன..
ஆனால் பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் சந்தோஷி நந்திகம், நிரூபிக்கப்படாத அல்லது நடைமுறைக்கு மாறான கருவுறுதல் குறிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இந்த 5 காலாவதியான நம்பிக்கைகள் கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அண்டவிடுப்பு, அதாவது, பெண்களின் கருப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியேற்றப்படும் போது உடலுறவு கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் அண்டவிடுப்பின் போது உடலுறவு கொள்வது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றாலும், அது ஒரு உத்தரவாதமல்ல என்றும், அண்டவிடுப்பின் போது மட்டுமே உடலுறவு கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
கருத்தரிக்க முயற்சிக்கும்போது தேங்காய் எண்ணெய்யில் சமைப்பது அவசியம் என்ற கட்டுக்கதை குறித்தும் சந்தோஷி கருத்து தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் சாத்தியமான சுகாதார நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கருவுறுதலில் அதன் நேரடி தாக்கத்தை ஆதரிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்..
5 தவறான கருவுறுதல் குறிப்புகள்:
டாக்டர் சந்தோஷியின் பதிவில் “ கருமுட்டையை உறைய வைப்பது கருவுறுதல் காப்பீடு அல்ல. வயதுக்கு ஏற்ப கருவுறுதல் குறைகிறது. கருமுட்டையை உறைய வைப்பதில் மீது நம்பிக்கை வைக்காதீர்கள், உண்மைகளை நம்புங்கள்.
எடையைக் குறைத்தால் கர்ப்பம்? எடை என்பது ஒரு காரணி மட்டுமே.. கருவுறுதல் என்பது ஹார்மோன், வளர்சிதை மாற்றம், உணர்ச்சி மற்றும் பல கரரணிகள் சேர்ந்தது.. எனவே கொழுப்பைக் குறைத்தல் மருந்து அல்ல.
அண்டவிடுப்பின் போது மட்டுமே உடலுறவு : “நேரம் முக்கியம், ஆம். ஆனால் விந்தணு ஆரோக்கியம், முட்டையின் தரம், மன அழுத்தம் மற்றும் இணைப்பு மிகவும் முக்கியம். உங்கள் உடல் ஒரு ரோபோ காலண்டர் அல்ல.”
கருவுறுதலுக்கு தேங்காய் எண்ணெய் : டாக்டர் சந்தோஷி மேலும், “எந்த ஒரு மேஜிக் எண்ணெயும் இல்லை. கருவுறுதல் என்பது எண்ணெய் மாற்றத்தைப் பற்றியது அல்ல.. இது ஒட்டுமொத்த ஹார்மோன் சமநிலை மற்றும் அழற்சி எதிர்ப்பு ஊட்டச்சத்து பற்றியது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
கடுமையான கருவுறுதல் உணவுகள் தான் முக்கியம் : கடுமையான உணவுகள் பெரும்பாலும் அதிக மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. சமச்சீரான உணவு அவசியம்.. உங்கள் உடலுக்குத் தேவையானது ஊட்டச்சத்து, தண்டனை அல்ல,” என்று என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : Weight Loss : இந்த சமையல் எண்ணெய் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.. வெயிட் லாஸ் பண்ண பெஸ்ட் சாய்ஸ்..