நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. இன்று தங்கம் விலை சற்று குறைவு.. எவ்வளவு தெரியுமா?

gold coins gold jewellery floor background 181203 24090 1

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.73,200 விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை சரசரவென குறைந்தது.. இதனால் கடந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3,000 என்ற அளவுக்கு தங்கம் விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.9,150க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,200 விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல் இன்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ரேஷன் கார்டு தொடர்பான முக்கிய அப்டேட்.. இதை செய்யாவிட்டால் உங்கள் கார்டு ரத்து செய்யப்படும்..!

English Summary

In Chennai today, the price of gold fell by Rs. 80 per sovereign, selling for Rs. 73,200.

RUPA

Next Post

நகங்கள் எப்படி வளர்கின்றன?. முன்பக்கமா…. பின்பக்கமா?. சுவாரஸிய தகவல்!

Tue Jul 29 , 2025
நகங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவை நம் உடலின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் குறிக்கின்றன. உங்கள் நகங்கள் வலுவாகவும், பளபளப்பாகவும், சுத்தமாகவும் இருந்தால், அவை உங்கள் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். நாம் தினமும் நம் நகங்களைப் பார்த்து, அவற்றை வெட்டி, அவற்றை அழகாக்கி, சுத்தமாக வைத்திருக்கிறோம். ஆனால் நகங்கள் எப்படி வளர்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அவை நாம் வெட்டிய இடத்திலிருந்து வளர்கின்றனவா அல்லது பின்புறத்திலிருந்து வளர்கின்றனவா? பெரும்பாலும் பலர் […]
befunky collage 1 1749655824 1

You May Like