உஷார்!. வயிறு தொடர்பான பிரச்சனைக்கு பயன்படும் மாத்திரையில் புற்றுநோய் கூறுகள்!. மத்திய அரசு எச்சரிக்கை!.

cancer tablet warning 11zon

வயிற்றில் வாயு மற்றும் எரிச்சல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் Ranitidine என்ற மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control) எச்சரிக்கை விடுத்துள்ளது.


நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் மருந்துகளை சிறிய உடல் நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவது பலமுறை நடக்கிறது. ஆனால் இதைச் செய்வது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?. இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் வைத்திருக்கும் எந்தவொரு மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பெற வேண்டும் என்பது மிக முக்கியம். மருந்து தொடர்பான பக்கவிளைவுகள் அல்லது பாதுகாப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்.

இந்தநிலையில், சமீபத்தில், வயிற்றில் ஏற்படும் அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனைகளுக்குப் பிரபலமான ரானிடிடைன் குறித்து அரசாங்கம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், மருந்தை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த மருந்தில் உள்ள NDMA (N-Nitrosodimethylamine) பொருளின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த மருந்தில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பது குறித்து அரசாங்கம் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. NDMA என்பது ஒரு சாத்தியமான புற்றுநோய் உண்டாக்கும் கூறு ஆகும், இதன் இருப்பு கடந்த சில ஆண்டுகளாக கவலையாக உள்ளது.

இந்த உத்தரவை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் (DGCI) டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி பிறப்பித்துள்ளார். அதில், கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்ற மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (DTAB) 92வது கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது, அதில் ஒரு நிபுணர் குழுவின் அறிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டது. NDMA தொடர்பான கவலைகளை விசாரிக்க இந்தக் குழு டிசம்பர் 2024 இல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரக் மருந்து ஆலோசனை வாரியம் (DTAB), NDMA உள்ளதற்கான அனைத்து அம்சங்களையும் விசாரிக்க, பெரிய குழுவை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதில் சேமிப்பு நிபந்தனைகள் போன்ற காரணிகளும் சேரும், ஏனெனில் அவை NDMA உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். இதோடு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), இந்த மருந்தின் நீண்டகால பாதுகாப்பு தொடர்பான ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் DTAB பரிந்துரை செய்துள்ளது.

மருந்துகளின் shelf life ஆயுளைக் கட்டுப்படுத்துதல், சேமிப்பு நடைமுறைகளை (storage protocols) மீண்டும் மதிப்பீடு செய்தல், பொருளின் NDMA அளவை கண்டறியும் பரிசோதனை முறைகளை முழு விநியோக சங்கிலியிலும் மேம்படுத்துதல் போன்ற ஆபத்து அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்க உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி AIIMS இன் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர், NDMA ஒரு சாத்தியமான புற்றுநோயை உண்டாக்கும் காரணி என்று கூறினார், மேலும் ஃபேமோடிடின் மற்றும் பான்டோபிரசோல் போன்ற பாதுகாப்பான மருந்துகள் கிடைக்கும்போது, ranitidine பயன்பாடு தொடரப்படக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் NDMA இருப்பதால், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ரானிடிடின் மருந்து ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவில் மீண்டும் அதன் மீதான கண்காணிப்பை அதிகரிப்பது அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஒருவர் ரானிடிடினை எடுத்துக் கொண்டால், அவர் தனது மருத்துவரை அணுகி பாதுகாப்பான மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Readmore: அடேங்கப்பா.. தினமும் 7,000 அடிகள் நடந்தால் இத்தனை நன்மைகள் இருக்கா..? – அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

KOKILA

Next Post

அதிகரிக்கும் ஆணவ கொலை: தென் தமிழகத்தில் அரசு இதை செய்ய வேண்டும்..!! - பா. ரஞ்சித் பரபர அறிக்கை

Wed Jul 30 , 2025
Increasing honor killings: Tamil Nadu government should do this in South Tamil Nadu..!! - P. Ranjith
pa ranjith

You May Like