fbpx

எதிர்காலத்தில் ஆண்கள் எல்லாம் பெண்களாக மாறிவிடுவார்கள்!… இதுதான் காரணம்!… நெருங்கும் ஆபத்து!

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால் ஆண் உயிரினங்கள் பெண்களாக மாறும் ஆபத்தான அதிசயம் இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலால் காலநிலை மாற்றம் மற்றும் திடீர் இயற்கை பேரிடர்கள் போன்றவை மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இந்த பருவ நிலை மாற்றமானது மனிதர் மட்டுமில்லாது உயிரினங்களையும் பெரிதும் அபாயத்தில் தள்ளியுள்ளது. அதிலும் சில உயிரினங்களை ஆச்சரியமூட்டும் வகையில் இந்த பருவநிலை மாற்றம் பாதித்துள்ளது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள சென்ட்ரல் பியர்டட் ட்ரேகன்ஸ் (central bearded dragons) என்ற ஊர்வன பல்லிகள் இனம் குறிப்பிடத்தக்க வெப்ப நிலைக்கு மேல் அடைக்காக்கப்பட்டால் முட்டைகளில் உள்ள குஞ்சுகள் மரபணு ரீதியாக ஆணாக இருந்தாலும் பெண் உயிரினமாக மாறிவிடுமாம். இதைப்போன்றே சில ஊர்வன வகை உயிரினங்களின் பாலினத்தை வெப்பநிலை பகுதி அளவு தீர்மானிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து பூமியின் வெப்பம் அதிகரித்து வந்தால் உயிரினங்களில் உள்ள ஆண்கள் எல்லாம் பெண்களாக மாறி குறிப்பிட்ட இனமே இல்லாமல் அழிந்து விடும் என அறிவியலாளர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பொதுவாக மேகங்களே ஒரு கண்ணாடி போல செயல்பட்டு சூரிய ஒளியை பிரதிபலிக்கும், ஆனால் தற்போது அதிகரித்து வரும் வெப்பத்தால் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படும் தாழ்வான மேகங்கள் குறைந்து வருகின்றன. இந்த மேகங்கள் இவ்வாறு குறைந்து கொண்டே போனால் உலகின் வெளிச்சம் சிறிது சிறிதாக குறைய தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற பசுமை வாயுக்களால் மீன்கள் வாசனை சக்தியை இழந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புவி வெப்பமயமாதால் உலகின் உணவு சங்கிலி தொடரும் முற்றிலுமாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Kokila

Next Post

#Weather: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் கணிப்பு...!

Sat Sep 16 , 2023
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காற்றின் திசை மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் […]

You May Like