வெறும் 11 நாட்களில் ரூ.404 கோடி வசூல் சாதனை பாலிடவும் படம் பற்றி தெரியுமா?
மோஹித் சூரி இயக்கத்தில் கடந்த 18-ம் தேதி வெளியான படம் சயாரா.. இந்த படத்தின் நாயகன் அஹான் பாண்டே மற்றும் நாயகி அனீத் பத்தா இருவருமே இந்த படம் மூலம் தான் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளனர்.. ஆனால் தங்கள் முதல் படத்திலேயே இந்த ஜோடி கவனம் பெற தொடங்கிவிட்டனர்..
முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.. படம் வெளியானது முதலே, இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது.. இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.. படம் வெளியான முதல் நாளில் இருந்தே படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருவதால் வசூலிலும் இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
சயாரா படம் பாக்ஸ் ஆபிஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.. வெறும் 11 நாட்களில் உலகளவில் ரூ.404 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.. இதன் மூலம் இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த காதல் படமாக மாறி உள்ளது..
மோஹித் சூரி இயக்கிய சயாரா, 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான சாவா படத்தின் வசூலை இப்படம் விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்தியாவில் ரூ.300 கோடி வசூலை ஈட்டிய முதல் காதல் படமாக சயாரா மாறியுள்ளது.. மேலும் உலகளாவிய வருவாயில் ஆமிர் கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ (ரூ.264 கோடி) சயாரா முந்தியுள்ளது. ஒரு காதல் படத்திற்கான இரண்டாவது வார இறுதி வசூலில் சயாரா அதிக வசூலைப் பெற்றுள்ளது
சயாரா தலைப்புப் பாடல் ஸ்பாட்டிஃபையின் உலகளாவிய டாப் 10 இல் நுழைந்த முதல் பாலிவுட் பாடலாகும். இந்தப் பாடல் ஸ்பாட்டிஃபை இந்தியாவில் 3.61 மில்லியன் முறையும், வெளியான 24 மணி நேரத்திற்குள் உலகளவில் 3.87 மில்லியன் ஸ்ட்ரீம்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
சயாரா படத்திற்காக முதலில் அணுகப்பட்ட முதல் கதாநாயகர்கள் அஹான் மற்றும் அனீத் அல்ல என்பது பலருக்கும் தெரியாது.. நட்சத்திர தம்பதி சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் ‘சயாரா ‘ படத்திற்கான முதல் தேர்வாக இருந்தனர்.
சமீபத்திய ஒரு நேர்காணலில், சயாரா இயக்குனர் மோஹித் சூரி பேசிய போது “ பிரபலமான நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைக்க பரிசீலித்து வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா தான், இந்த படம் தெரிந்த முகங்களுடன் வேலை செய்யாது, இது இரண்டு இளைஞர்களின் கதை. புதிய முகங்களை நடிக்க வைப்போம்” என்று சில பரிந்துரைகளை வழங்கினார்” என்று தெரிவித்தார்.
Read More : “சில ஆண்டுகளுக்கு முன்பே..” புதிய குண்டை தூக்கி போட்ட ஜோய் கிரிசில்டா.. மௌனம் காக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்..