ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எல்லையோர மாவட்டமான பூஞ்சில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோரை இழந்த 30 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல்காந்தி, அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 28 பேர் உயிரிழந்ததில், பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
பேரழிவு தரும் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு ராகுல் காந்தி பூஞ்சிற்குச் சென்று துயரமடைந்த குடும்பங்களைச் சந்தித்தார். அப்போது ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய முடிந்தால் அதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்தோம். அதன்படி, பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த பள்ளிச் செல்லும் குழந்தைகளின் பட்டியலைத் தயாரிக்குமாறு ராகுல் காந்தி எங்களிடம் கேட்டுக் கொண்டார், அதன்படி, பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை தயாரித்து வழங்கியுள்ளோம் என்று கர்ரா கூறியுள்ளார். குறிப்பாக பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் 22 குழந்தைகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட் 30 குழந்தைகளின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அனுப்பிய நிதி உதவியை ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா, ஐஒய்சி தலைவர் உதய் பானு சிப், ஏஐசிசி செயலாளர் முகமது ஷாநவாஸ் சவுத்ரி மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் செயல் தலைவர் ராமன் பல்லா ஆகியோர் வழங்கினர்.
இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் உதய் பானு சிப் கூறுகையில், ராகுல் காந்திக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது, எந்த சூழ்நிலையிலும் உதவி விரைவில் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதாகும். ஒவ்வொரு குடும்பமும் இந்த உதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ராகுல் காந்தி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் எப்போதும் உடன் நிற்பதை எப்போதும் காட்டியுள்ளார், இன்றும் அதையே செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Readmore: ராகு – கேது தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் நாதநாதர் கோவில்.. இத்தனை சிறப்புகளா..?