தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தவெகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த My Tvk என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்தார்.
இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ 1967, 1977 தேர்தல் மாதிரி 2026 தேர்தலும் அமையப் போகிறது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.. இந்த 2 மாபெரும் தேர்தல்களில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டவர்களின் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்து தான் புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றனர்.. இந்த வெற்றிக்கு சிம்பிள் லாஜிக் தான் காரணம்.. ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என எல்லா மக்களை சந்தித்தனர்.. இதுவே வெற்றிக்கு காரணம்.
நாமும் இதை சரியாக செய்தாலே போதும்.. எல்லாக் குடும்பங்களையும் உறுப்பினராக சேர்த்து நம்மால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்.. அதனால் இந்த செயலியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இதை தொட்ர்ந்து மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களுடன் மக்களாக இருக்கப் போகிறோம்.. நாம் இருக்கிறோம்.. நம்முடன் மக்கள் இருக்கிறார்கள்.. நல்லதே நடக்கும்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்தனர். ‘My TVK’ செயலியில், OTP மூலம் அடையாளம் உறுதி செய்த பலரும் “You are not a cadre to access My TVK” என்ற செய்தியால் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் அனைவரும் ஆப்பை பயன்படுத்தலாம் என எதிர்பார்த்த நிலையில், இது மட்டுமின்றி, உறுப்பினர்களுக்கான தனி உள்நுழைவு மட்டுமே இயக்கப்பட்டு இருப்பது பலருக்குள் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Read more: அடுத்தடுத்த தோல்வி.. தமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து அண்ணாமலை எக்ஸிட்..?