அமெரிக்க கடற்படையின் F-35 ஸ்டீல்த் போர் விமானம் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளானது..
கலிபோர்னியாவில் அமெரிக்க கடற்படையின் F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் கடற்படை விமான நிலையமான லெமூர் அருகே நடந்ததாக கூறப்படுகிறது. விமானத்தின் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் மாலை 6:30 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த விமானம் “Rough Raiders” என்று அழைக்கப்படும் ஸ்ட்ரைக் ஃபைட்டர் ஸ்குவாட்ரான் VF-125 படைக்கு ஒதுக்கப்பட்டது என்று கடற்படை தெரிவித்துள்ளது, குறிப்பாக, VF-125 ஒரு ஃப்ளீட் மாற்றுப் படை. இது விமானிகள் மற்றும் விமானக் குழுவினருக்கு பயிற்சி அளிப்பதற்கு பொறுப்பாகும். விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தின் காட்சிகளும் ஆன்லைனில் பரவி வருகின்றன.. வீடியோவில், விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதை பார்க்க முடிகிறது.. அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
கடற்படை நிலையம் ஃப்ரெஸ்னோ நகரிலிருந்து தென்மேற்கே 64 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் கடற்படையின் F-35 போர் விமானம், 37 நாட்களுக்குப் பிறகு புறப்பட்டது. பிரிட்டிஷ் F-35B லைட்னிங் II போர் விமானம், ஹைட்ராலிக் சிஸ்டம் கோளாறு காரணமாக கேரளாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் இங்கிலாந்து கடற்படை விமானம் தாங்கி கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் ஒரு பகுதியாகும். அறிக்கைகளின்படி, போர் விமானம் வழக்கமான பயணத்தில் இருந்தபோது, அதில் ஒரு கோளாறு ஏற்பட்டதால், கப்பலில் தரையிறங்க முடியவில்லை. பின்னர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அடைந்தது, இது அவசர மீட்பு விமானநிலையமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது அவசர தரையிறக்க அனுமதி கோரியது…