மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவித்து மும்பை என் ஐ ஏ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் நெரிசலான பகுதியில் செப்டம்பர் 29, 2008 அன்று ஒரு பைக்கில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்தில் 6 பேர் உயிரிழந்தனர்.. 101 பேர் காயமடைந்தனர். முஸ்லிம் சமூகம் நோன்பு நோற்கும் ரமலான் மாதம் என்பதால் இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்த சம்பவம் நாட்டில் நடந்த முதல் பயங்கரவாத தாக்குதலாகும். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு இந்து தீவிரவாதிகள் குழு மீது வழக்குத் தொடரப்பட்டது. உள்ளூர் போலீசாரிடமிருந்து விசாரணை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு (ATS) மாற்றப்பட்டது. அதன் பின்னர் 2011 இல் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக NIA நீதிமன்றத்தில் சுமார் 350 சாட்சிகள் ஆஜராகினர். இதில் 30 சாட்சிகள் மறுப்புப் பத்திரம் அளித்தனர். 7 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நடத்தியது. 2018 இல் தொடங்கிய விசாரணை ஏப்ரல் 19, 2025 அன்று முடிவடைந்து, வழக்கு தீர்ப்புக்காக ஒதுக்கப்பட்டது.
நாட்டின் மிக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பயங்கரவாத வழக்குகளில் ஒன்றான இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. வழக்கின் இறுதிகட்ட விசாரணைகளுக்குப் பிறகு, மும்பையில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்து, பிரக்யா சிங் தாக்கூர், புரோஹித் உள்ளிட்ட ஏழு பேருக்கும் முழுமையான விடுதலையை வழங்கியது.
Read more: இரண்டு வாரங்களுக்கு எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்த்தால் உடலில் என்ன நடக்கும்..?