உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
1911 இல் பிறந்த பாபா வங்கா, 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்தார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார்.
அவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளைப் பற்றி கூறியது பல முறை உண்மையாகியுள்ளது. சமீபத்தில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் அவர் முன்னறிவித்தார். இதேபோல், 2025-ஆம் ஆண்டிற்கான அவரது சில கணிப்புகள் நிச்சயமாக நிறைவேறியுள்ளது. அதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ரஷ்யாவைத் தாக்கிய 8.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலநடுக்கம் ரஷ்யாவில் மட்டுமல்ல, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் மூலம், ‘பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வாங்காவின் பயங்கரமான கணிப்புகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ரஷ்யா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட இந்த பேரழிவுகள், உலக அழிவின் தொடக்கமா? என்று மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இதனை தொடர்ந்து 2025 முதல் 5079 வரையிலான பாபா வங்காவின் பயங்கரமான கணிப்புகள் வெளியாகியுள்ளன. நியூயார்க் போஸ்ட்டின் படி, வாங்காவின் பிற கணிப்புகளில் ஐரோப்பாவில் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆகியவை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
வரும் ஆண்டுகளிலும் என்ன நடக்கும்? 2028ல் மனிதர்கள் வெள்ளி கிரகத்தை நோக்கி நகர்வார்கள். 2076ல் கம்யூனிசம் உலகம் முழுவதும் பரவுகிறது. 2130ல் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு இருக்கும். 3797ல் பூமி இனி வாழத் தகுதியற்றதாக இருக்கும். 5079 ல் முழு உலகமும் முடிவுக்கு வரும் என்று கணித்துள்ளார்.
நாம் பயப்பட வேண்டுமா அல்லது கற்றுக்கொள்ள வேண்டுமா? பாபா வங்காவின் வார்த்தைகளுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பூகம்பம் போன்ற பேரழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் இயற்கையின் அறிகுறிகளைப் புறக்கணிப்பதும் சரியல்ல.