fbpx

10 வது நாளில் ரூ.797.50 கோடியை வசூலித்த ஜவான்..! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

அட்லி இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் உருவான படம் ஜவான். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார் இயக்குநர் அட்லீ. இந்த படத்தில் நயன்தாரா தீபிகா படுகோன், சஞ்ஜய் தத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 7ஆம் தேதி, உலகம் முழுவது 4,500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படம் முதல்நாளில் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக ஜவான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஜவான் படத்தின் 10 நாட்களின் வசூலை தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி ஜவான் திரைப்படம் 10 நாளில் 797.50 கோடி வரை வசூலித்துள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானின் கடந்த படமான பதான் ரூ.1000 கோடி வசூலித்துள்ளது, இந்த வசூல் சாதனையை விரைவில் ஜவான் திரைப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜவான் படத்தின் வெற்றி கொண்டாட்டம் நேற்றைய தினம் நடந்தது. இதில் ஷாருக்கான், அட்லீ, தீபிகா படுகோன், அனிருத், விஜய் சேதுபதி ஆகியோர் பங்கேற்று படத்தின் வெற்றியை ஆடிப்பாடி கொண்டாடினர்.

Kathir

Next Post

இன்று தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டுத் தொடர்...! 4 மசோதா தாக்கல்...!

Mon Sep 18 , 2023
75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணம் குறித்த விவாதம் இன்று தொடங்குகிறது. ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 4 முக்கிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் கேபினட் அமைச்சரை இந்திய தலைமை நீதிபதிக்கு மாற்றுவது உட்பட நான்கு மசோதாக்கள் அமர்வின் போது எடுத்துக் கொள்ளப்படும். மத்திய அரசு ஆகஸ்ட் […]

You May Like