Flash: துணை ஜனாதிபதி தேர்தல் எப்போது..? சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!

Untitled design 5 6 jpg 1

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களால் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக கூறிய அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார்.


ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவோர் ஆக. 7-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர். இதற்காக அந்த உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயாரிப்பது அவசியமாகும். அந்தவகையில் தற்போதைய தரவுகளுடன் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயார் செய்து இறுது செய்துள்ளது.

Read more: அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

English Summary

When is the Vice Presidential election? The Election Commission announced a short while ago…!

Next Post

விமானங்களில் ‘13’ என்ற எண் இருக்காது.. பல விமான நிறுவனங்கள் இதை தவிர்க்க என்ன காரணம் தெரியுமா?

Fri Aug 1 , 2025
நீங்கள் எப்போதாவது விமானப் பயணத்தை முன்பதிவு செய்யும் போது, அதில் 13வ்து வரிசை இல்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? முதலில், இது ஒருவித தொழில்நுட்பப் பிழை அல்லது சீரற்ற வடிவமைப்புத் தேர்வு என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படியல்ல. இது ஒரு பிழையோ அல்லது தற்செயல் நிகழ்வோ அல்ல. உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் வரிசை எண் 13 ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று ஒரு முடிவை எடுத்துள்ளன.. […]
h2 b787 economy panoramic 2 1

You May Like