fbpx

ஒரே நேரத்தில் 14 மாணவிகள்..!! கைகளை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு..!! இதெல்லாம் ஒரு விளையாட்டா..?

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் தண்டேலி பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் 14 பேர் தங்களது கைகளை பிளேடு போன்ற கூர்மையான பொருள் கொண்டு அறுத்துக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிந்ததும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவிகளிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாணவிகள் டாஸ்க் விளையாட்டு விளையாடியதாகவும், அப்போது அந்த டாஸ்கில் கூறப்பட்டுள்ளது படி ஒரே நேரத்தில் மாணவிகள் கையை அறுத்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

செப்.30ஆம் தேதியே கடைசி..!! நிதி சம்பந்தமான இந்த வேலைகளை முடிச்சிருங்க..!! அப்புறம் சிக்கல் உங்களுக்குத்தான்..!!

Mon Sep 18 , 2023
செப்டம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த மாதத்தில் பல நிதிப் பணிகளுக்கு காலக்கெடு உள்ளது. அதை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். நீங்கள் இந்த வேலையை முடிக்கவில்லை என்றால், பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அதாவது, 30 செப்டம்பர் 2023 அன்று நடக்கும் 5 மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். செப்டம்பர் 30, 2023-க்குள் ஆதார் எண்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், அக்டோபர் […]

You May Like