பிரதமர் மோடியை கார்னர் செய்யும் எதிர்க்கட்சிகள்!. அடுத்த பிரதமர் இவர்தான்!. மெகா பிளான்!

next pm yogi 11zon

வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது ஆக உள்ளதால், அவர் ஓய்வு பெறவேண்டும் என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் ஆர்எஸ்எஸ் தீவிரமாக உள்ளதாகவும், அடுத்த பிரதமர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவராக இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாஜவில் 75 வயதானதும் தலைவர்கள் அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். 2019 மக்களவை தேர்தலின்போது, 75 வயதுக்கு மேற்பட்ட பாஜ தலைவர்களுக்கு பலருக்கு சீட் வழங்க வேண்டாம் என கட்சி முடிவு செய்துள்ளதாக அமித்ஷா தெரிவித்திருந்தார். இது ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதால், பாஜவில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஸ்வந்த் சின்கா, ரீட்டா பகுகுனா ஜோஷி ஆகியோர் ஓய்வு பெற்றனர். கடந்த மக்களவை தேர்தல்களில், 75 வயதான பாஜ தலைவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டது.

எழுதப்படாத இந்த விதி காரணமாக, கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, ‘பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நரேந்திர மோடி 75 வயதானதும் பதவி விலகுவாரா?’ என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பிவருகின்றனர்.

இதேபோல் பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இந்தசூழலில் தான் புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் தேர்வு செய்யும் அடுத்த பிரதமர் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவராக இருப்பார். அதாவது சாய் லாலாவை பிரதமராக்கிய ஆர்.எஸ்.எஸ்., அடுத்ததாக சாது ஒருவரை(யோகி ஆதித்யநாத்) பிரதமராக்க துணிந்துவிட்டது என்பதுதான் தற்போது தேசிய அரசியலில் பரபரப்பான பேச்சாக உள்ளது.

அதற்காக ஆழம் பார்க்கவே 75 வயது நிரம்பியவர்கள் முக்கிய பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று மோகன் பகவத் பேசினார் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள், ஆர்.எஸ்.எஸ் -ன் இந்த முடிவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை கார்னர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: Rain: வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை… எந்தெந்த மாவட்டத்தில்…?

KOKILA

Next Post

சென்னையில் அதிர்ச்சி..! பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை....!

Sat Aug 2 , 2025
சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டார். சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண், சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை பணி முடிந்து பைக் டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றபோது, அந்த பைக் டாக்ஸியை ஓட்டிய நபர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை […]
taxi 2025

You May Like