மற்றொரு பேரழிவு ஏற்படுமா? ஜூலை சுனாமியை கணித்த ஜப்பான் பாபா வங்காவின் மற்ற கணிப்புகள் என்னென்ன?

AA1JKYv9

ஜப்பான் பாபா வங்கா என்று அழைக்கப்படும் தட்சுகியின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கணிப்புகள் என்னென்ன?

கடந்த 30-ம் தேதி ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. புதன்கிழமை கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஜப்பானின் ஹொக்கைடோ தீவுகளில் சுனாமி தாக்கியது.. மேலும் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கபப்ட்டது.


இதனால் ஜப்பானிய கலைஞர் ரியோ டாட்சுகியின் கணிப்புகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் ஜூலையில் ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் என்று ரியோ டாட்சுகி கணித்திருந்தார்.. 5-ம் தேதி மிகப்பெரிய சுனாமி ஏற்படும் என்று அவர் கூறியிருந்த நிலையில், 30-ம் தேதி ஏற்பட்டது.. தேதி மட்டும் தான் வேறு, மற்றபடிஅவரின் கணிப்புகள் உண்மையாகிவிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..

‘புதிய பாபா வாங்கா’ யார்?

ஜப்பானிய மங்கா கலைஞரான ரியோ டாட்சுகி, எதிர்காலத்தின் தரிசனங்கள் என்று தனது கணிப்புகளை வெளியிட்டதாக கவனம் பெற்றார்.. அவரது மிகவும் பிரபலமான படைப்பான தி ஃபியூச்சர் ஐ சா, இயற்கை பேரழிவுகள் மற்றும் முக்கிய உலக நிகழ்வுகள் பற்றிய ஓவியங்கள் மற்றும் குறுகிய விளக்கங்களைக் கொண்டுள்ளது. அவரின் மற்ற கணிப்புகள் என்னென்ன?

ஜப்பானில் 2011 நிலநடுக்கம் மற்றும் சுனாமி

1999 இல் எழுதப்பட்ட ஒரு புத்தகம் 2011 இல் ஏற்பட்ட சுனாமி பேரழிவை எவ்வாறு முன்னறிவிக்க முடியும்? ஆனால் அது நடந்தது.. தட்சுகி தனது புத்தகத்தில் “நான் ஒரு பெரிய பேரழிவை கனவு கண்டேன். ஜப்பானிய தீவுக்கூட்டத்தின் தெற்கே பசிபிக் பெருங்கடலின் நீர் உயரும்” என்று அதில் அவர் கூறியிருந்தார்.

2020 கோவிட்-19 தொற்றுநோய்

கோவிட்-19 தொற்றுநோயையும் தட்சுகி கணித்துள்ளார்.. “2020 ஆம் ஆண்டில், ஒரு அறியப்படாத வைரஸ் தோன்றும், ஏப்ரல் மாதத்தில் அதன் உச்சத்தை எட்டும்” என்று புத்தகத்தில் எழுதியுள்ளார்.. அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வைரஸ் உச்சத்தை எட்டவில்லை, ஆனால் 2021-ல் எட்டியது..

2030 இல் மீண்டும் கோவிட் வரும்

கோவிட் தொற்றுநோய் பற்றிய தட்சுகியின் கணிப்பு 2020 உடன் முடிவடையவில்லை. வைரஸ் மீண்டும் வரும் என்றும் அவர் கணித்துள்ளார். அதே புத்தகத்தில் “அது பின்னர் மறைந்துவிடும், ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோன்றும்” என்று அவர் எழுதினார். எனவே, தட்சுகியின் கணிப்பு உண்மையாகிவிட்டால், முழு உலகத்தையும் ஆட்டிப்படைத்த வைரஸ் அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் தோன்றக்கூடும்.

ஃப்ரெடி மெர்குரியின் மரணம்

ராக் இசைக்குழு குயின் முன்னணி பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் குறித்து தட்சுகி கணித்திருந்தார்.. நவம்பர் 24, 1991 அன்று இறப்பதற்கு சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது நவம்பர் 24, 1976 அன்று அந்த நிகழ்வைப் பற்றி தட்சுகிக்கு ஒரு தீர்க்க தரிசனம் கிடைத்தது..

கிரேட் ஹான்ஷின் பூகம்பம்

கிரேட் ஹான்ஷின் பூகம்பம், 20 ஆம் நூற்றாண்டில் ஜப்பானின் இரண்டாவது மிக மோசமான நிலநடுக்கமாகும். ஜனவரி 17, 1995 அன்று ஹைகோ மாகாணத்தின் தெற்குப் பகுதியை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. இந்த அழிவைப் பற்றி தட்சுகிக்கு ஒரு தீர்க்க தரிசனம் கிடைத்தது.. இந்த நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

Read More : இன்று சூரிய கிரகணம்? பூமி 6 நிமிடங்கள் இருளில் மூழ்குமா? இந்தியாவில் பார்க்க முடியுமா? உண்மையை உடைத்த நாசா..

English Summary

What other predictions are included in the book of Tatsuki, known as the Japanese Baba Vanga?

RUPA

Next Post

தினமும் ரூ.300 சேமித்தால்… ரூ.17 லட்சம் உங்களுடையது... இந்த அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?

Sat Aug 2 , 2025
மத்திய அரசுத் துறையைச் சேர்ந்த தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்களில் RD ஒன்றாகும். இது ஒரு சேமிப்புத் திட்டமாகும்.. இதில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகைகளை டெபாசிட் செய்து பெரிய தொகையை சேமிக்கலாம். இது ஒரு வங்கி RD போல செயல்படுகிறது. ஆனால் அரசாங்க உத்தரவாதம் காரணமாக, இந்த திட்டம் முற்றிலும் பாதுகாப்பானது. சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், உங்கள் பணம் பாதிக்கப்படாது. நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இது ஒரு […]
w 1280h 720imgid 01jde7kefnz8rs5dbdzwtds8wqimgname tamil news 2024 11 24t100843.526

You May Like