பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது, வீடியோ எடுத்து மிரட்டியது உள்ளிட்ட பல புகார்கள் கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் மீது குவிந்தது.. ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்தின் கன்னிகாடா பண்ணை வீட்டில் பணிபுரிந்த 48 வயது பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் அவர் இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது.. கூறப்படுகிறது – ஒரு முறை பண்ணை வீட்டிலும் பின்னர் பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டிலும். இந்த கொடுமையை ரேவண்ணா தனது மொபைல் போனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
ரேவண்ணா மீது பாலியல் புகார்கள் குவிந்த நிலையில் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.. தண்டனை விவரம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரன் ரேவண்ணாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இது முதன்மையானது. தண்டனை விசாரணையின் போது, குற்றத்தின் தீவிரத்தை காரணம் காட்டி, ஆயுள் தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு நீதிமன்றத்தை வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.



