இன்றைய வேகமான உலகில், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் அசுரவளர்ச்சியை கண்டுள்ளன. அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் கண்டிப்பாக இருக்கும். தகவல் தொடர்பை தாண்டி பாடல்கள் கேட்க, படம் பார்க்க, கேம்ஸ் விளையாட மொபைல் பயன்படுகிறது. அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதிக நன்மை மற்றும் தீமை என இரண்டும் நடக்கிறது. அதே சமயம் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொபைல் எண் தொடர்பாக பல்வேறு மோசடிகள் நடக்கிறது. குற்றச்சம்பவங்களை அதிகமாக மொபைல் எண் வைத்து தான் காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர். அந்த வகையில் ஒரு மொபைல் எண் என்பது முக்கியமானதாக உள்ளது.
மக்கள் தங்கள் மொபைல் எண்களை பெரும்பாலும் புதிய வேலைக்கு செல்லும் இடத்தில், புதிய தொடக்கத்தை விரும்பும் போது அல்லது தனிப்பட்ட சில காரணங்களால் மாற்றுகின்றனர். நீண்ட ஆண்டுகளாக ஒரே மொபைல் எண்ணை வைத்திருப்பது அரிதானது. ஒருவர் ஒரே மொபைல் எண்ணை நீண்ட காலமாக வைத்து இருந்தால் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடனான அவர்களின் தொடர்புகளை அவர்கள் மதிக்கிறார்கள், வசதிக்காக அல்லது போக்குகளை விட திறந்த தொடர்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது.
மேலும், ஒரே எண்ணை நீண்ட காலமாக வைத்து இருப்பது அவர்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது. முந்தைய காலத்தில் ஒரு சிம் கார்டு வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. ஆனால் இன்று ஆதார் மூலம் எளிதாக புதிய சிம் வாங்கி கொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் ஒருவர் ஒரே எண்ணை நீண்ட காலம் வைத்திருக்கிறார் என்றார் அவர் நேர்மையானவர் என்பதை உணர்த்துகிறது.
ஆனால் ஒரே போன் நம்பரை 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்துவதில் சாதகங்கள் இருந்தாலும், பல்வேறு பாதகங்களை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது. நீண்டகாலம் பயன்படுத்துவதால், உங்கள் போன் நம்பர், டேட்டா மூலம் பரவியிருக்கும். இதனால் உங்கள் நம்பர் தவறாக பயன்படுத்தப்படலாம். தேவையற்ற மோசடி, கால்கள் அதிகம் வரும், உங்கள் அடையாளம் திருடப்படலாம். இணையத்தில் பல விஷியங்களுக்கு உங்கள் நம்பர் கொடுக்கப்பட்டு இருந்தால் ரிஸ்க் அதிகமாக இருக்கும்.
Readmore: இங்கிலாந்தில் அடித்து துவம்சம் செய்த சுப்மன் கில்!. பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து அசத்தல்!.