வங்கியில் கிளார்க் வேலை.. ரூ.64,480 சம்பளம்.. 10,277 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க.. 

bank job 1

இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்: வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் (கிளர்க்) – 10,277 – மாநில வாரியாக பணியிட விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் மட்டும் 897 பணியிடங்கள் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் 367, கர்நாடகா -1,170, கேரளா -330, புதுவை -19, தெலுங்கான 261 என மொத்தம் 36 மாநிலங்களிலும் சேர்த்து 10,277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 21.08.2025 அன்று 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு: ரூ.24,050 – 64,480 வரை

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு முறையை பொறுத்தவரை முதன்மை தேர்வு , மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும். மெயின்ஸ் தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ibps.in/wp-content/uploads/DetailedNotification_CRP_CSA_XV_Final_for_Website.pdf

Read more: “நீரிழிவு நோய் மீளக்கூடியது.. நிரந்தரமானது அல்ல..!” – விராட் கோலியின் ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்

English Summary

Bank Clerk Job.. Salary Rs.64,480.. 10,277 Vacancies..!! Apply Now..

Next Post

மீண்டும் சுனாமி அலர்ட்.. 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்..!!

Sun Aug 3 , 2025
Tsunami alert again for Russia.. Powerful earthquake measuring 7.0 on the Richter scale.. People in panic..!!
us earthquake tsunami warning 11zon

You May Like