6 முறை கால்.. ஆதாரத்தை காட்டிய ஓபிஎஸ்.. மறுக்கும் நயினார் நாகேந்திரன்..!! வெடிக்கும் வார்த்தை போர்..

ops nayinar

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன். அவர் விருப்பப்பட்டால் ஆகஸ்ட் 26ல் தமிழகம் வரும் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி இருந்தார்.. இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும், எனது அழைப்பை அவர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆனால், தன்னையோ, தனது உதவியாளரையோ ஓ.பன்னீர்செல்வம் அழைக்கவில்லை. ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்த கடிதம் என்னிடம் வந்து சேரவில்லை. ஒருவேளை கடிதம் வந்து சேர்ந்தால் கண்டிப்பாக எடுத்துக் காட்டுகிறேன். அப்போது யார் உண்மை சொல்கிறார், யார் பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மற்றும் ஏப்.12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை காண்பித்தார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களிடம் காண்பித்தது பற்றிய கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் “செல்போனில் காட்ட வேண்டாம்; ஆதாரமாக கொடுங்கள்” என பதில் அளித்தார்.

Read more: வங்கியில் கிளார்க் வேலை.. ரூ.64,480 சம்பளம்.. 10,277 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க.. 

English Summary

Called 6 times.. OPS showed evidence.. Nayinar Nagendran denies..!! Explosive war of words..

Next Post

"கடவுளை பார்க்க சொர்க்கத்திற்கு செல்கிறேன்.." மூட நம்பிக்கையால் பெண் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்..!!

Sun Aug 3 , 2025
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் – ஹிமாயத் நகரில் இடம்பெற்ற தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் அருண்குமார் ஜெயின் என்பவரின் மனைவி பூஜா (வயது 43), மூடநம்பிக்கையின் பேரில் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார். அருண்குமார் ஜெயின், தனது மனைவி பூஜா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஹிமாயத் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை அவர் தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அந்த […]
telugana crime 2

You May Like