சினிமா பாடலுக்கு AI மூலம் இசையமைத்த அனிருத்.. அவரே ஓபனா சொல்லிட்டாரே..!!

Anirudh

மருத்துவம், கல்வி, தொழில், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சாட் ஜிபிடியை பயன்படுத்தி ஒரு பாடலுக்கு இசையமைத்ததாக அனிருத் தெரிவித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகப்பெரும் ஹிட் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத் ரவிச்சந்தர், தற்போதைய முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2, ஜனநாயகன் உள்ளிட்ட தமிழ்ப்படங்களும், தெலுங்கில் கிங்டம், தி பாரடைஸ், டாக்ஸிக், கிங் போன்ற படங்களும் அவரது இசையில் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், இசை தயாரிப்பில் சில நேரங்களில் தாமதம் ஏற்படும் சூழலில் ChatGPT போன்ற ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியை நாடுவதாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” சாட் ஜிபிடி பிரீமியம் வெர்ஷனை பணம் கட்டி பயன்படுத்துகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு முழு பாடலை பதிவிட்டு இரண்டு வரிகள் எனக்கு வேண்டும் என்று கேட்டேன். அப்போது சாட் ஜிபிடி எனக்கு சுமார் 10 ஆப்ஷன்களை வழங்கியது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து எனது இசைப் பணியை தொடர்ந்தேன்” என்றார்.

மேலும், “சில நேரங்களில் சரியான இசை யோசனைகள் நேரத்துக்கு வராத போது, ஏஐ-யை நாடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை,” என்று அனிருத் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அனிருத்தின் இந்தப் பேச்சு சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. புதிதாக வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்பே தன்னை மாற்றிக் கொண்டு அதனுடன் இணைந்து அவர் பயணிக்கத் தொடங்கியிருப்பது தலைவன் வேற லெவல்ல என்று ரசிகர்களை பேச வைத்துள்ளது.

Read more: சூப்பர்..! 7 சதவீத வட்டியில் தமிழக அரசு வழங்கும் கடன் உதவி…! எப்படி இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்…?

English Summary

Anirudh composed music for a movie song using AI.. He himself composed the opening song..!!

Next Post

"என் கண் பார்வையில் பிரச்சனை இல்லை; ஆனால் உடலில்"…! ஓய்வு குறித்து பேசிய தல தோனி!. ரசிகர்கள் ஷாக்!

Mon Aug 4 , 2025
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து தோனி சூசமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படும், மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. 43 வயதான தோனி, கடந்த 2020ம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி […]
retirement dhoni speech 11zon

You May Like