திருச்சி மாவட்டம் முசிறியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முசிறியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் Dr. A.P.J. அப்துல் கலாம் மாரத்தான் சங்கம், சைன் அகாடமி மற்றும் கனிவு பவுண்டேஷன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாரத்தான் ஓட்டப் போட்டி சனிக்கிழமை(ஆகஸ்ட் 4) சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், பெரியவர்கள், 12–18 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், 12 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் என மூன்று பிரிவுகளுக்கு தனித்தனி ஓட்டங்கள் நடைபெற்றன. போட்டி முசிறி துறையூர் ரோடு பகுதியில் அமைத்துள்ள S. B. மெட்ரிகுலேசன் பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
காவல் ஆய்வாளர் செல்லத்துரை, கனிவு பவுண்டேஷன் நிறுவனர் தங்க கோபிநாத் ஆகியோர் மாரத்தானை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சிவராஜ், பேராசிரியர் ராஜா, வெங்கடேசன், சசிகுமார், கமல் மற்றும் சந்திரகாசன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
இதில் பெரியவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டி மூன்று தொலைதூரப் பிரிவுகளில் நடைபெற்றது.
பெரியவர்களுக்கு 7.1 கிலோமீட்டர் தூரமும், சிறுவர்களுக்கு 5.1 கிலோமீட்டர் தூரமும், குழந்தைகளுக்கு 1.5 கிலோமீட்டர் தூரமும் போட்டி நடைபெற்றது. முதலிடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு ரூ.10,000 வரை பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதுடன், அனைவருக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.