பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்…!!

prem nazhir

மலையாள சினிமாவின் பிரபல நடிகரும், 80களில் பரவலாக அறியப்பட்ட கதாநாயகனும், முத்தமிழ் சூப்பர்ஸ்டார் பிரேம் நசீரின் மகனுமான ஷானவாஸ் (வயது 71) திருவனந்தபுரத்தில் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,  நேற்று இரவு 11.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


திருவனந்தபுரம் வழுதக்காடு பகுதியில் அகாஷ்வாணி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷானவாஸ், கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். 1981-ம் ஆண்டு பாலச்சந்திர மேனன் இயக்கிய ‘பிரேமகீதங்கள்’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ஷானவாஸ், காதல் நாயகனாக துவங்கி வில்லன் கதாபாத்திரங்கள் வரை பன்முக திறமையை வெளிப்படுத்தியவர்.

40 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தில் 96க்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் 1987-ல் வெளியான ‘ஜாதிப்பூக்கள்’  திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களைத் தவிர, ஷானவாஸ் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more: மாதம் தோறும் ரூ.750 உதவித்தொகை… ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு…!

English Summary

Actor Shanavas, son of Prem Nazir passes away at 71

Next Post

ஷாக்!. 10 நொடிக்கு மேல் பில்களை கையில் வைத்திருந்தால் விந்தணு குறையுமாம்.. புதிய ஆய்வில் தகவல்..

Tue Aug 5 , 2025
ஷாப்பிங் பில்ல்கள், உணவக (restaurant) ரசீதுகள் மற்றும் ATM ஸ்லிப்புகள் போன்றவற்றில் Bisphenol S (BPS) எனப்படும் ஒரு மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் இருக்கக்கூடும். அந்த காகிதங்களை தொடும் போது வெறும் சில விநாடிகளில் தோல் மூலம் உடலுக்குள் உறிஞ்சப்பட்டுவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. BPS என்பது ஹார்மோன் சீர்குலைக்கும் ஒரு ரசாயனமாகும், இது ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட உடலின் இயல்பான […]
Shopping Bills Toxic Chemicals 11zon

You May Like