ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு.. ரூ.40,000 சம்பளம்.. உடனே விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

job 1

வெளிநாடுகளில் தங்கி பணிப்புரிய விருப்பம் உள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான தமிழக அரசின் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் செயல்படும் நிறுவனம்தான் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம். தமிழ்நாடு அரசின் மூலம் இயக்கப்படும் இந்நிறுவனம், வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கு தகுந்த ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வருகிறது. குறிப்பாக விசா உள்ளிட்ட ஆவணங்கள் முதல் இருப்பிடம், உணவு ஆகியவற்றை ஏற்படுத்தி தருகிறது. அரசின் கீழ் இயங்குவதால் நம்பகரமான நிறுவனமாக உள்ளது.

பணியிடம்: ஓமன் நாட்டில் Production (Exposure in Melting/Molding/Process Control), Quality Inspector (Exposure in Quality/ Final Inspection) மற்றும் Electrical Maintenance ஆகிய பிரிவுகளில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். Electrical Maintenance தேவைப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி என்ன?

* மெக்கானிக்கல் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதார்கள் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபடியாக 26 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.37,000 முதல் அதிகபடியாக ரூ.40,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற இமெயில் முகவரி மூலம் சுய விவரம் அடங்கிய விண்ணப்பப்படிவம், கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர், தமிழ்நாடு அரசு நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15 கடைசி தேதி. மேலும், இப்பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் https://omcmanpower.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 044-22502267 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 9566239685 வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Read more: ChatGPT பயன்படுத்துவதால் மனித மூளைக்கு பாதிப்பு.. 47% சிந்தனை ஆற்றல் குறையும்..!! – ஆய்வில் தகவல்

English Summary

The Tamil Nadu Government’s Overseas Employment Agency has issued a notification for those who are interested in staying and working abroad.

Next Post

மாயமான மலேசிய விமானம் ஞாபகம் இருக்கா? அது 'கருந்துளையில்' மூழ்கியதா? முடிவுக்கு வந்த மர்மம்?

Tue Aug 5 , 2025
மார்ச் 8, 2014 அதிகாலையில், மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டது. முதல் 40 நிமிடங்களுக்கு எல்லாம் இயல்பாக தான் தெரிந்தது. பின்னர் 01:19 மணிக்கு இறுதி வானொலி செய்தி வந்தது, முதல் அதிகாரி ஃபரிக் ஹமீத் அமைதியாக, “குட் நைட் மலேசியன் 370” என்று வழங்கினார். சில வினாடிகள் கழித்து, போயிங் 777 வியட்நாமிய வான்வெளியைக் கடந்தபோது, ரேடாரில் இருந்து நழுவியது. அதன் பின்னர் அந்த […]
AA1JUYuZ

You May Like