காலையிலே அதிர்ச்சி.. 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது…! இலங்கை கடற்படை அட்டூழியம்…!

fisherman boat 2025

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.


எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது. மேலும், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

Vignesh

Next Post

செம வாய்ப்பு..! மாணவர்கள் பள்ளியிலே ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு...! முழு விவரம்

Wed Aug 6 , 2025
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்; தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வதவித் தொகை […]
aadhar school 2025

You May Like