நேற்று ரூ.600 உயர்ந்த தங்கம் விலை.. இன்று அதிகரித்ததா? குறைந்ததா? விலை நிலவரம்..

DALL E 2023 11 06 17 35 28 Create a luxurious and captivating banner for an article that celebrates the marriage of traditional Indian gold jewelry with contemporary design aest e6f89ab642 1 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த 2-ம் தேதி, ரூ. 1,120 உயர்ந்தது..

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,760 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.9,380க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1-ம் தேதி தங்கம் விலை சவரனுக்குக் ரூ.73,200க்கு விற்பனை செய்யப்பட்டது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து, ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : தங்கம் விலை தினமும் ரூ.200 உயர்வது நார்மல் தான்.. ஆனால் “இந்தளவுக்கு” குறையும்..!! ஆனந்த் சீனிவாசன் சொன்ன ரியாலிட்டி

RUPA

Next Post

உடலின் இந்த பகுதிகளில் வலி இருந்தால், கவனமா இருங்க..! அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்..!

Wed Aug 6 , 2025
உடலின் பல்வேறு பகுதிகளில் வலி ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.. அதிகப்படியான வேலை, சோர்வு, மோசமான தோரணை காரணமாக வலி ஏற்படலாம்.. ஆனால் இந்த வலி, புற்றுநோய் போன்ற கடுமையான பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே சாதாரண வலிக்கும் தொடர்ச்சியான வலிக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். முதுகு, வயிறு, தலை, எலும்புகள் அல்லது மார்பு போன்ற உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் உங்களுக்கு தொடர்ந்து வலி இருந்தால், […]
body pain thumb 1669537695398

You May Like