உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில். முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசு திட்டத்தின் பெயரில். அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது..
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர கால மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..
அப்போது மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில், முதல்வரை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக சி.வி சண்முகம் தரப்பு வாதிட்டது.. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற முதல்வரின் பெயரை பயன்படுத்தவில்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு சிவி. சண்முகம் தரப்பு, அதிமுக ஆட்சியில் அம்மா என பயன்படுத்தப்பட்டது பொதுவான பெயர் வாதிட்டது.. ஆனால் அரசு தரப்பு, அதிமுக 22 திட்டங்களுக்கு அம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது.. அம்மா என்றால் ஜெயலலிதா தான் என்பது அனைவருக்கும் தெரியும் என்று வாதிட்டார்..
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.. மேலும் அரசியல் சண்டையை நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள் என்றும் இந்த மனுதாக்கலில் உள்நோக்கம் இருப்பதாக கருதுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. மேலும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் எனில், அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்று கூறினர்..
அரசு திட்டத்திற்கு முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ள உச்சநீதிமன்றம் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடர்ந்த சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது..