“இது முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி.. தப்ப முடியாது என்று தெரிந்தும் ஏன் இதை செய்தார்கள்..” SI கொலை குறித்து கொந்தளித்த அண்ணாமலை..

FotoJet 1

திருப்பூர் எஸ்.ஐ கொலை குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் உள்ள மடத்துக்குளம் அருகே பணியின் போது சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் நடந்த தகராறு குறித்து விசாரிக்க சென்ற போது, காவல்துறையினரை 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது..


இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், சண்முகவேலின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்..

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அவரின் பதிவில் “ தமிழ்நாட்டில் நேற்று இரவு ஒரு சிறப்பு துணை காவல் ஆய்வாளர் சீருடையில் இருந்த போது கொல்லப்பட்டது, நமது சமூகம் அதன் ஆன்மாவை இழந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் பாதையில் செல்வதற்கான அறிகுறியாகும். குற்றவாளிகள் அல்லது ஒரு சாதாரண மனிதர் கோபத்தில் ஒரு போலீஸ்காரரை பொது இடத்தில் அவர்களைக் கொல்லத் தூண்டுவது எது? அவர்களின் மனசாட்சிப்படி, இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.. ஆனால் அவர்கள் அதைச் செய்கிறார்கள். ஏன்?

அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தாலும், சில்லறை விற்பனையாளர்களாக செயல்படும் அரசாங்க கடைகளாலும் பெருமளவில் விற்கப்படும் மதுபானம், போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்தல் போன்ற காரணங்களால் கிராமம் முதல் நகர்ப்புறம் வரை அனைத்து மட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. இந்த 3 பிரச்சனைகளையிஉம் தீர்ப்பது இயல்புநிலையைக் கொண்டுவருவதற்கு முக்கியமாகும்.

குறிப்பாக கீழ் மட்டங்களில் (துணை ஆய்வாளர் மற்றும் அதற்குக் கீழே உள்ளவர்கள்) காவல்துறையினர் தொழில்நுட்ப ரீதியாக ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய நேரம் இது. துப்பாக்கிகள், பாடி கேமராக்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் கொள்முதல் அதிகரித்தல், சிறந்த ரோந்து கார்கள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.. மிக முக்கியமாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும்.. எனவே போலீசார் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு நண்பர் இல்லாமல் தனியாக செல்லும் நிலை இருக்காது..

உயர்மட்டத்தில் உள்ள கொள்கை தோல்விகள் கீழ்மட்டத்தில் உள்ள சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கின்றன. இது நமது தூங்கிக்கொண்டிருக்கும் தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று நம்புகிறேன் அவர் நமது முதல்வரும் கூட..” என்று பதிவிட்டுள்ளார்..

Read More : எமனாக வந்த நாய்.. தந்தை கண் முன்னே 4 வயது சிறுவன் துடிதுடித்து பலி..!! கடலூரில் சோகம்..

English Summary

Former Tamil Nadu BJP leader Annamalai has condemned the murder of Tiruppur SI on his X page.

RUPA

Next Post

பிளஸ் 2 தேர்வில் முதலிடம்.. IAS அதிகாரி ஆக ஆசைப்பட்ட பிரபல நடிகை..! யார் தெரியுமா..?

Wed Aug 6 , 2025
Topping the Plus 2 exam.. The famous actress who aspired to become an IAS officer..! Do you know who..?
Actress Raashi Khanna 1

You May Like