fbpx

பிக்சட் டெபாசிட்டில் அதிக வட்டி கிடைக்க வேண்டுமா..? இந்த தேதிக்குள் இணைந்திருங்கள்..!!

மக்கள் பலர் தங்களின் எதிர்காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருப்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகின்றனர். பல வங்கிகள் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வீதத்தை அதிகமாக வழங்கி வருகிறது. அந்த வகையில், ஐடிபிஐ வங்கியில் பிக்சட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகமான வட்டி கிடைக்கிறது.

அதாவது 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் தொகை வழங்க அம்ரீத் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேர முன்னதாக செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்கள் 444 நாள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7.15% வட்டி விகிதத்தில் பலனை பெறுவார்கள். அதே போல மூத்த குடிமக்களும் இந்த திட்டத்தில் 7.65 சதவீதம் வட்டி பெறுவார்கள். 375 நாட்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

வருமானவரி பிடித்தம்... இந்த செயலி மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்...! முழு விவரம் உள்ளே...

Thu Sep 21 , 2023
வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு TDS நண்பன் என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட CHATBOT என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், TDS நண்பன் என்ற பெயர்கொண்ட ஒரு APPLICATION , PLAYSTORE ல், ஆண்ட்ராயிட் மற்றும் ioS பயன் நபர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும், வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை http://www.tnincometax.gov.in/ என்ற இணையதள முகவரியின் […]

You May Like