உத்தரகாசி மேக வெடிப்பு: 28 சுற்றுலா பயணிகள் மாயம்! எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்?

uttarkhand cloud burst

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் கேரளாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு காணாமல் போயுள்ளது.

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தின் தாராலி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் காணாமல் போயுள்ளனர். கங்கோத்ரி புனித யாத்திரைத் தலத்தில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்ள் என மொத்த கிராமமே இந்த பெரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது..


இதில் கேரளாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு காணாமல் போயுள்ளது. காணாமல் போன 28 பேரில், 20 பேர் மகாராஷ்டிராவில் குடியேறிய கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற 8 பேர் கேரளாவின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தம்பதிகளில் ஒருவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்..

மேலும் “ ஒரு நாள் முன்பு அவர்களுடன் பேசினோம்.. அதில் தம்பதியினர் கங்கோத்ரியை விட்டு வெளியேறுவதாக கூறினர்.. அதே பாதையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.”அவர்கள் சென்றதிலிருந்து நாங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று தெரிவித்தார்..

10 நாள் உத்தரகண்ட் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்த ஹரித்வாரை தளமாகக் கொண்ட ஒரு பயண நிறுவனம் மூலம் இந்த ஜோடி சென்றது.. ஆனால் இப்போது அவர்களால் கூட எந்த புதுப்பிப்புகளையும் வழங்க முடியவில்லை.

உத்தரகாசி மேக வெடிப்பு

உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேக வெடிப்பு காரணமாக சில மணி நேரங்களிலும் மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால், சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான பகுதியான தாராலியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. இதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது.. நிலச்சரிவில் இதுவரை சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. தாராலியின் பாதி பகுதி குப்பைகள், சேறு மற்றும் தண்ணீரின் பெரும் சேற்றில் புதைந்துள்ளது. கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தாராலி ஒரு பிரபலமான நிறுத்தமாகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

இதற்கிடையில், கீர் கங்கா நதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்குப் பிறகு ஒன்பது இந்திய ராணுவ வீரர்களும் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, மேலும் 14 RAJRIF இன் கட்டளை அதிகாரி கர்னல் ஹர்ஷவர்தன் தலைமையில் 150 பணியாளர்கள் முக்கியமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்தைக் கவனித்து, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பேசினார். எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி, மாநில அரசு நிவாரணக் குழுக்களை மேற்பார்வையிட்டு வருவதாகவும், மக்களுக்கு உதவ அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Read More : 2 பேர் பலி.. பலர் காயம்.. ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.. மீட்புப் பணிகள் தீவிரம்..

English Summary

A group of 28 tourists from Kerala have gone missing in flash floods in Uttarakhand.

RUPA

Next Post

தயவுசெஞ்சு அதிக குழந்தைகள் பெத்துக்கோங்க.. ரூ.1 லட்சம் கோடி செலவிட தயாராக இருக்கும் சீனா.. ஆனால் இளைஞர்களின் மனநிலை என்ன?

Wed Aug 6 , 2025
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்டா நாடுகள் என்றால், சீனா, இந்தியா தான் நம் நினைவுக்கு வரும்.. எனவே மக்களை தொகையை கட்டுப்படுத்த சீனா ஒரு காலத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டது.. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தம்பதிகளுக்கு தண்டனை வழங்கியது. அதன் பழைய ஒரு குழந்தை விதியின் கீழ், சில பெற்றோர்கள் 100,000 யுவான் (₹12 லட்சம்) வரை பெரிய அபராதம் செலுத்தினர். இது அவர்களின் ஆண்டு வருமானத்தை […]
china birthrate the country that once limited babies is now paying for them 1

You May Like