பெரும் சோகம்!. ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர்கள் 2 பேர் உட்பட 8 பேர் பலி!.

ghana helicopter crash 11zon

கானாவில் (Ghana) ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து நேற்று (06) காலை 9.12 மணியளவில் அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இதையடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முஹம்மது உள்பட அதில் பயணம் செய்த 8 பேரும் உடல்சிதறி பலியாகினர். நாட்டில் சட்டவிரோத சுரங்கத் தொழிலை ஒடுக்குவதற்காக ஒபுவாசி நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

Readmore: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்!. சாதனை படைத்த ரஷீத்கான்!. 650 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமை!.

KOKILA

Next Post

Holiday: வார இறுதி விடுமுறை... தமிழகம் முழுவதும் 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு...!

Thu Aug 7 , 2025
வார இறுதிநாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்கேற்ப சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாக்குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 340 பேருந்துகள் […]
bus 2025 5

You May Like