TCS நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்க உள்ளதாக அறிவித்தூள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) தனது காலாண்டு முடிவுகள் வெளியிடும் போது இந்த வருடத்திற்கான சம்பள உயர்வு குறித்து நிர்வாகம் முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், டிசிஎஸ்-ன் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பெரும் சோகத்திலும், அதிர்ப்தியிலும் மூழ்கினர்.
சமீபத்தில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமீர் செக்காரியா, டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவதை முன்னுரிமையாகக் கருதுவதாக கூறினார். ஆனால் எப்போது இந்த சம்பள உயர்வு அளிக்கப்படும் என்பதை வெளிப்படையாக அவர் தெரிவிக்கவில்லை. சம்பள உயர்வு வராதா என ஏங்கிய ஊழியர்களுக்கு இந்த செய்தி நம்பிக்கையை அளித்தது.
இந்த நிலையில் TCS நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்க உள்ளதாக அறிவித்தூள்ளது. அன் நிறுவனத்தின் 80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் எனவுக், ஜூனியர் முதல் நடுத்தர ஊழியர்கள் வரை இதில் பலன் பெறுவார்கள்கள் என்றும் தெரிவித்தூள்ளது.
TCS நிறுவனத்தின் மனிதவள நிர்வாக தலைவர் மிலிந்த் லக்காட் மற்றும் புதிய CHRO ஆக நியமிக்கப்பட்டுள்ள K. சுதீப் ஆகியோரால் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், இந்த ஊதிய உயர்வு 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பான தகவல் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டாலும், உயர்வின் சரியான அளவு அல்லது சதவீதம் குறித்து எந்தவொரு விபரமும் தற்போது வெளியிடப்படவில்லை.
Read more: Alert: இன்று 8 மாவட்டங்களில் கனமழை…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!