இன்றைய டிஜிட்டல் உலகில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக ஊடக செயலிகளை பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப் செயலி என்பது பெரும்பாலானோரின் அன்றாட தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியமான தளமாக அமைந்துள்ளது.
சமீபத்தில், டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்துவிட்டதன் காரணமாக, தானாகவே பயனர்கள் தெரியாத குரூப்புகளில் சேர்க்கப்படுவது உள்ளிட்ட செயல்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது மூலம் மோசடி அழைப்புகள், தவறான தகவல்கள் போன்றவை பரவி வருகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு கான மெட்டா நிறுவனம், தற்போது புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டில் பயனர் தெரியாத நபர் அல்லது குரூப்பில் சேர்க்கப்பட்டால், “Safety Message” எனப்படும் பாதுகாப்பு அறிவிப்பு ஒன்று வரும். இதில், அந்த குரூப்பின் பெயர், உருவாக்குநர், உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் வழங்கப்படும். பயனர்கள் இதனை பார்த்து அந்த குரூப் நம்பிக்கைக்குரியது தான் என உறுதி செய்த பிறகு தொடர முடியும்.
இந்த அப்டேட் தானாக சேர்க்கும் மோசடி குரூப்புகள், ஸ்பாம்கள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளை தடுக்கும் முயற்சியாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. புதிய அப்டேட் அனைத்துப் பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் WhatsApp Settings > Privacy > Groups பகுதியில், “My Contacts” அல்லது “My Contacts Except…” என்பதை தேர்வு செய்வதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தலாம்.