சில குடும்பங்களில் ஏன் தொடர்ந்து ஆண் குழந்தைகள் அல்லது பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர் என்பது தொடர்பான புதுமையான தகவல் ஒன்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது.
1956 முதல் 2015 வரை பிறந்த அமெரிக்காவின் 58,000-க்கும் மேற்பட்ட பெண் செவிலியர்களின் பிறப்பு பதிவுகளை ஆய்வு செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குழந்தையின் பாலினம் என்பது எப்போதும் சீரான வாய்ப்பில் (50:50) தான் அமையும் என கண்டறிந்துள்ளனர்.
அறிக்கையின் முக்கியமான அம்சங்கள்: இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பங்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருப்பது அதிகமாகக் காணப்படுகிறது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களில், ஒரே பாலினத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மூன்று ஆண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில், நான்காவது குழந்தையும் ஆண் குழந்தையாக இருக்க 61% வாய்ப்பு உள்ளது. மூன்று பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில், நான்காவது குழந்தையும் பெண்ணாக இருப்பதற்கான வாய்ப்பு 58% ஆக இருக்கிறது. இந்த ஆய்வு Science Advances என்ற விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மெல்போர்ன் பல்கலைக்கழக மகப்பேறு நிபுணர் அலெக்ஸ் பாலியாகோவ், “புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், குழந்தையின் பாலினம் 50-50 என்றால் அது தவறான புரிதலாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார். இதேபோல், ஆய்வின் மூத்த எழுத்தாளர் ஜார்ஜ் சாவாரோ, “இரண்டு அல்லது மூன்று பெண்கள் உள்ள குடும்பத்தில், அடுத்த குழந்தை ஆணாக பிறக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்” என கூறினார்.
மேலும், குழந்தை பெறும் பெண்ணின் வயதும் இதில் முக்கிய பங்காற்றும் என தெரியவந்துள்ளது. 29 வயதிற்கு மேல் முதல் குழந்தையை பெற்ற பெண்கள், 23 வயதுக்குள் பெற்ற பெண்களுடன் ஒப்பிடும்போது ஒரே பாலினத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு 13% அதிகம் எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்காரணங்களில் ஒன்று, பெண்களின் வயதோடு ஏற்படும் யோனி pH மாற்றங்கள். இது, குறிப்பிட்ட பாலினத்தைச் சார்ந்த விந்தணுக்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, பாலின தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தந்தையின் உடல்நிலை போன்ற காரணிகள் இதில் பங்கு வகிக்கக்கூடும் என்றாலும், இவ்வாய்வில் தந்தையர் குறித்த தரவுகள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: ஆபத்தான பெருங்குடல் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள்.. இவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீங்க..