மாதம் ரூ.20,500 வருமானம் தரும் சேமிப்பு திட்டம்.. வயதான காலத்தில் யாரையும் நம்பியிருக்க வேண்டாம்..!!

8th Pay Commission Pension Increase 780x470.jpg 1

ஓய்வுக்கு பிறகு வருமானத்தை இழக்கக் கூடாது எனும் நோக்கத்தில், மத்திய அரசின் கீழ் செயல்படும் தபால் துறை, ‘மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்’ என்ற முக்கிய சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் தங்களது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் உறுதியான வருமானத்தைப் பெற முடிகிறது.


தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.2% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதத்தில், ஒருவர் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 வருமானம் கிடைக்கும். இதன் கீழ், காலாண்டுக்கு ரூ.61,500 வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 முதல், அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை செய்யலாம்.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் முதலீட்டிற்கு மாதம் ரூ.10,250 ரூபாயும், ரூ.30 லட்சம் முதலீட்டிற்கு மாதம் ரூ.20,500 ரூபாயும் வருமானம் பெற முடியும். வட்டி தொகை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களில் முதல் தேதியில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு பிரிவு 80C ன் படி வரி விலக்கும் உண்டு. ரூ.1.5 லட்சம் வரை முதலீட்டாளர்கள் வரிவிலக்கு பெறலாம்.

இந்திய அரசால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் முதலீடு செய்யப்படும் தொகை பணம் பாதுகாப்பாகவும், உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 இருந்து அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்து சேமிப்பு கணக்கை துவங்கலாம். ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்லாமல் வி.ஆர்.எஸ் எடுத்தவர்களும் கூட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: குறைவாக தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா..? ஆய்வில் வெளியான ஷாக் தகவல்..!

English Summary

An amazing plan that will give you an income of Rs. 20,500 per month.. You don’t have to depend on anyone in your old age..!!

Next Post

பொதுத்துறை வங்கியில் மேனேஜர் வேலை.. ரூ.93,960 சம்பளம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Thu Aug 7 , 2025
An employment notification has been issued for 250 vacancies for the post of Wealth Manager in a public sector bank.
bank job 1

You May Like