மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) என்பது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், குறுகிய கால முதலீட்டில் அதிக லாபம் தரும் சிறு சேமிப்புத் திட்டமாகும்.
இதில் முதலீடு செய்யும் பெண்கள் இரண்டு வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான இந்தத் திட்டத்தில், அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அரசு நடத்தும் இத்தகைய தபால் நிலையத் திட்டங்கள் பெண்களை தன்னிறைவு பெறச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீட்டிற்கு 7.5 சதவிகிதம் வலுவான வட்டி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரிவிலக்கின் பலனும் அதில் முதலீடு செய்தால் கிடைக்கும். இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், 10 வயது அல்லது அதற்கும் குறைவான பெண் குழந்தைகளும் கணக்கு தொடங்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் (MSSC) பெறப்பட்ட வட்டியைக் கணக்கிட்டுப் பார்த்தால், இந்தத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு வருட முதலீட்டுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். முதல் ஆண்டில் பெறுவது ரூ. 15,000 ஆகும். நிலையான வட்டி விகிதத்தில் அடுத்த ஆண்டில் மொத்தத் தொகைக்கு பெறப்பட்ட வட்டி ரூ.16,125 ஆகும். அதாவது, இரண்டு ஆண்டுகளில் வெறும் ரூ.2 லட்சம் முதலீட்டில், மொத்த வருமானம் ரூ.31,125 ஆகிறது. பெண்களுக்கு இது ஒரு சிறந்த திட்டம்.
எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தபால் நிலையங்கள் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். கணக்கு வைத்திருப்பவர் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் கணக்கை மூட விரும்பினால், கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு மூடப்பட்டால், வழங்கப்படும் 7.5% விகிதத்திற்குப் பதிலாக, ஆண்டுக்கு 5.5% வட்டி விகிதம் கொடுக்கப்படும். 2 சதவீதம் வட்டி குறைக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், அசல் தொகை மற்றும் வட்டி நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்.
Read more: ரேஷன் கடை பாமாயில் ஆரோக்கியத்திற்கு நல்லதா, கெட்டதா..? ஆய்வுகள் சொல்வது என்ன..?