வனவிலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. வேடிக்கையான சில வீடியோக்கள் வைரலானாலும், விலங்குகளின் ஆபத்தான வீடியோக்களும் கவனம் பெற்று வருகின்றன.. இதுபோன்ற ஒரு வீடியோ, இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளைஞர், முதலையுடன் ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.
முதலையிடம் இருந்து சில இன்ச் தொலைவில் நிற்கும் அந்த இளைஞர், கையில் ஒரு இறைச்சித் துண்டைப் பிடித்துக்கொண்டு, முதலை வாய்க்குள் போடுகிறார்… பசியுடன் இருக்கும் அந்த இளைஞருக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் அதை விழுங்குகிறது. அதை சாப்பிட்ட உடன் அந்த முதலை மீது தொடர்ந்து தண்ணீரை அள்ளி ஊற்றுகிறார்.. அவர் மீண்டும் உணவு கொடுக்கப் போகிறார் என்று தனது பெரிய வாயை பிளந்து கொண்டிருக்கிறது.. பின்னர் அந்த முதலையை தடவிக் கொடுக்கிறார்..
இந்த வீடியோ சிலருக்கு விளையாட்டுத்தனமாகத் தோன்றினாலும், அது ஆபத்தானது என்பதையும் மறுக்க முடியாது.. ஏனெனில் முதலைகள் எளிதில் கணிக்க முடியாத அளவுக்கு வேட்டையாடும் திறன் கொண்டவை.. எனவே எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்..
இந்த சம்பவம் பங்களாதேஷின் பாகர்ஹாட்டில் உள்ள கான் ஜஹான் அலி தர்காவில் நடந்தது. இந்த இடம் ஒரு வரலாற்று மற்றும் மத தலமாக மட்டுமல்லாமல், அங்கு வசிக்கும் முதலைகளுக்கும் பிரபலமானது.
பாகர்ஹாட் மாவட்டத்தில் அமைந்துள்ள கான் ஜஹான் அலி தர்கா, பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. அருகிலுள்ள நீர்நிலைகளில் வைக்கப்பட்டுள்ள முதலைகளுக்கு இறைச்சியை உணவாகக் கொடுக்கும் நடைமுறை அதன் தனித்துவமான ஈர்ப்புகளில் ஒன்றாகும். இந்த வழக்கம் பிரபலமாக இருந்தாலும், காட்டு விலங்குகளுடன் இதுபோன்ற நெருங்கிய தொடர்புகள் மிகவும் ஆபத்தானவை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.