நபிகள் நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான் மிலாது நபி. இது நபியின் நினைவு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இது தொடக்க காலத்தில் எகிப்தில் அதிகாரப்பூர்வ விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்னர், 11ஆம் நூற்றாண்டில் பிரபலமானது. அன்றைய காலகட்டங்களில், ஷியா முஸ்லிம்களின் அப்போதைய ஆளும் பழங்குடியினர் மட்டுமே இந்த பண்டிகையைக் கொண்டாட முடியும்.
12ஆம் நூற்றாண்டில் மட்டுமே சிரியா, மொராக்கோ, துருக்கி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த பண்டிகையை கொண்டாடத் தொடங்கினர். பின்னர், சில சன்னி முஸ்லீம் பிரிவுகள் இந்த நாளைக் கொண்டாடினர். அந்த வகையில் தான் தமிழகத்தில் மிலாது நபி வரும் 28ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுச்சேரியிலும் மிலாது நபி செப்.28-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்.27-ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்.28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.