வெள்ளையனே வெளியேறு இயக்கம்!. மகாத்மா காந்தி கூறிய அந்த வார்த்தை!. பரபரப்பான தமிழ்நாடு!. இந்திய சுதந்திரத்திற்கு எவ்வாறு உதவியது?.

Quit India Movement 11zon

ஆகஸ்ட் 8, 1942 அன்று தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கியமான தருணமாகும். மகாத்மா காந்தி தலைமையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கப்பட்டது. பாரத் சோடோ அந்தோலன் என்றும் அழைக்கப்படும் இந்த இயக்கம், இந்தியாவின் சுயராஜ்யக் கோரிக்கையை நிவர்த்தி செய்ய கிரிப்ஸ் மிஷன் தவறியதற்கான நேரடி பிரதிபலிப்பாகும்.


வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பது மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு இந்தியர்களையும் உள்ளடக்கிய ஒரு பரவலான இயக்கமாகும். மற்ற அமைதியான போராட்டங்களைப் போலல்லாமல், இந்த இயக்கம் பிரிட்டிஷ் முழுமையாக வெளியேறக் கோரி நேரடியான மற்றும் உறுதியான அணுகுமுறையை உள்ளடக்கியது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியைக் கணிசமாக பலவீனப்படுத்தியது, சுதந்திரத்திற்கான பரவலான விருப்பத்தை வெளிப்படுத்தியது மற்றும் இந்தியாவின் இறுதி சுதந்திரத்திற்கு வழி வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது, இது இந்திய மக்களின் ஒற்றுமையையும் உறுதியையும் நிரூபிக்கிறது.

பிரிட்டிஷ் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லையென்றால் காந்தியின் தலைமையில் மிகப் பெரிய அளவில் அகிம்சை வழியிலான ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும் என்றும் தீர்மானம் கூறியது. இந்தத் தீர்மானத்தை நேரு முன் மொழிய, வல்லபாய் படேல் வழிமொழிந்தார். ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலையில் தீர்மானம் நிறைவேறியது.

”அடுத்த நாள் காலை ஐந்து மணியளவில் காந்தி கைதுசெய்யப்பட்டார். அவருடன் தங்கியிருந்த மகாதேவதேசாய், சரோஜினி நாயுடு ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு ஆகா கான் அரண்மணையில் சிறைவைக்கப்பட்டனர். நேரு, படேல், அபுல்கலாம் ஆசாத் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு, ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டனர்.” ”காங்கிரசும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் மூடி முத்திரையிடப்பட்டன. காங்கிரசின் தீர்மானம், அச்சு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு என அரசு குறிப்பிட்டது”.

”சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே, காந்தியின் செயலரான மகாதேவ் தேசாய் மரணமடைந்தார். மற்றொரு பக்கம் இந்தியாவின் எல்லா மாகாணங்களிலும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள் நடந்தன”

‘செய் அல்லது செத்து மடி’ என்று மகாத்மா காந்தி ஏன் அறைகூவல் விடுத்தார்? 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மகாத்மா காந்தியின் “செய் அல்லது செத்து மடி” என்ற அழைப்பு, இந்தியாவின் சுதந்திரக் கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதற்கும், இரண்டாம் உலகப் போரில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டதற்கும் நேரடியான பதிலாகும்.

“செய் அல்லது செத்து மடி” என்ற முழக்கம், இந்திய மக்களின் சுதந்திரத்தை அடைய வேண்டும் அல்லது அந்த முயற்சியில் அழிந்து போக வேண்டும் என்ற உறுதியை உள்ளடக்கியது. இந்த இயக்கம் இந்திய சுதந்திர செயல்முறையை கணிசமாக துரிதப்படுத்தியது மற்றும் கட்டுப்பாட்டை கைவிட பிரிட்டன் மீது சர்வதேச அழுத்தத்தை தீவிரப்படுத்தியது.

குறிப்பாக, மகாத்மா காந்தியின் “செய் அல்லது செத்து மடி” (இந்தியில் “கரோ யா மரோ” ) என்ற அழைப்பு, இந்தியர்கள் சுதந்திரத்தை அடைவதற்கு உறுதியளிக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் தங்களைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற ஒரு சக்திவாய்ந்த உறுதிமொழியாக இருந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவின் சுதந்திரத்தை எவ்வாறு வடிவமைத்தது? வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆங்கிலேயர்கள் மீதான அழுத்தத்தைத் தீவிரப்படுத்தியது, இந்திய ஒற்றுமையையும் உறுதியையும் வெளிப்படுத்தியது, இறுதியில் காலனித்துவ நீக்க செயல்முறையை துரிதப்படுத்தியது. இந்த இயக்கம் பல்வேறு பிராந்தியங்கள், மதங்கள் மற்றும் சமூக வகுப்புகளைச் சேர்ந்த இந்தியர்களை ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைத்து, தேசிய அடையாள உணர்வையும் கூட்டு நோக்கத்தையும் வளர்த்தது.

தமிழகத்திலும் தீவிரம் அடைந்த போராட்டம்: தமிழ்நாட்டிலும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகத் தீவிரமாக செயல்பட்டது. பம்பாயில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய காமராஜர், சென்னைக்கு வராமல் அரக்கோணத்திலேயே இறங்கினார். அங்கிருந்து ராணிப்பேட்டைக்கு வந்தவர், அடுத்த நாள் சுற்றுவட்டாரத்தில் இருந்த காங்கிரஸ்காரர்களைச் சந்தித்து என்ன செய்யவேண்டுமென ஆலோசனை நடத்தினார்.

இதற்குப் பிறகு, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் போன்ற இடங்களுக்கும் சென்று காங்கிரஸ்காரர்களைச் சந்தித்துப் பேசினார். பிறகு விருதுநகருக்கு வந்தடைந்து, கைதானார். அவர் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
தமிழ்நாட்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் நடந்த சம்பவங்களை ஸ்டாலின் குணசேகரன் தொகுத்த ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ நூலில் இடம்பெற்றுள்ள என். உமாதாணுவின் கட்டுரை விரிவாக குறிப்பிடுகிறது.

“ஆகஸ்ட் 8ஆம் தேதிதான் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிற்பகலே மதுரை பரபரப்பானது. மதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகியான சிதம்பர பாரதி கைது செய்யப்பட்டார். அன்று மாலையே திலகர் திடலில் மிகப் பெரிய கூட்டம் கொட்டும் மழைக்கு நடுவில் நடந்தது. ஆகஸ்ட் 10ஆம் தேதி மிகப் பெரிய அளவில் மதுரையில் கடையடைப்பு நடத்தப்பட்டது.”

”அன்றும் கூட்டம் நடக்கலாம், தலைவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்த்து திலகர் திடல் முன்பாக பெரும் கூட்டம் கூடியது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டம் கலையாத நிலையில், காவல்துறை தடியடி நடத்தியது. சில சிறுவர்கள் காவல்துறையினர் மீது கல்வீசினர். இதற்குப் பிறகு மாலை 6 மணியளவில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இருபது பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் மூன்று பேர் சிறுவர்கள். மறு நாள் நகரம் முழுவதும் சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.”

”சின்னக்கடைத் தெரு, தெற்குச் சித்திரைவீதியில் இருந்த தபால் நிலையங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மூன்று நாட்கள் மதுரையில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்த நிலையில், மாவட்டம் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகே மதுரையில் அமைதி திரும்பியது.”

”அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று ஊர்வலமாகச் சென்ற சொர்ணத்தம்மாள் உள்ளிட்ட இரண்டு பெண்மணிகளை கைதுசெய்த காவல்துறை, அவர்களை லாரியில் ஏற்றி 6-7 மைல்களுக்கு அப்பால் கொண்டு சென்று நிர்வாணப்படுத்தியது. இதில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட விஸ்வநாத நாயர் என்ற காவல்துறை ஆய்வாளர் மீது அமிலம் வீசப்பட்டது.”

”கோயம்புத்தூரில் இருந்த சூலூர் விமான நிலையம் தாக்கப்பட்டது. ராணுவத் தளவாடங்கள் சூறையாடப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர். கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் குலசேகரப்பட்டனம் முதல் உடன்குடி வரையுள்ள தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. குலசேகரபட்டனத்தில் காவலர்களிடமிருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியான லோன் கொல்லப்பட்டார்.”

”ராமநாதபுரத்தில் திருவேகம்புரத்தில் இருந்த பாலம் உடைக்கப்பட்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருவாடனை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறை உடைக்கப்பட்டு கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தேவகோட்டையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

Readmore: கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கும் திட்டம்…! 19 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்…!

KOKILA

Next Post

நோட்...! இனி காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை... சென்னையில் மாற்றம்...! தவறி கூட போகாதீங்க...

Sat Aug 9 , 2025
போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பீக் ஹவர்களில் தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில் கனரக வாகனங்கள் […]
traffic bike 2025

You May Like