பொதுவாக உத்திரபிரதேசம் என்றாலே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகம் நடைபெறும் ஒரு மாநிலமாக கருதுவார்கள். அதற்கு ஏற்றார் போல், அங்கு நடைபெறும் பல்வேறு சம்பவங்களும் இருக்கின்றன.
நாள்தோறும் அந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்ற வருகிறது. இது போன்ற செயல்களை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், அந்த நடவடிக்கைகள் இந்த தவறுகளை குறைப்பதாக தெரியவில்லை.
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில், 7 வயதான சிறுமி ஒருவர், தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு அருகே, ஒரு கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான், நேற்று மாலை தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வயல் பகுதிக்கு அந்த சிறுமி சென்றுள்ளார்.
அந்த சிறுமியின் வீட்டருகே நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிட வேலையில் ஒரு கொத்தனார் பக்கத்து கிராமத்தில் இருந்து வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான், அந்த சிறுமி தனியாக வயல் பகுதிக்கு செல்வதை நோட்டமிட்ட அந்த கொத்தனார், சிறுமியின் பின்னாலேயே சென்றுள்ளார்.
சிறுமியை பின்தொடர்ந்து சென்ற அந்த கொத்தனார், வயல் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்கு அந்த சிறுமி சென்றவுடன், அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக ஆத்துமேறி நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், அந்த சிறுமியை அந்த கொத்தனார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த காமுகனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அந்த சிறுமி முயற்சித்தும் அவரால், அந்த கொத்தனாரிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அந்த சிறுமி மூர்ச்சை ஆன நிலைக்கு சென்று விட்டார். இதை பார்த்த அந்த கொத்தனார், சிறுமி இறந்து விட்டதாக நினைத்து விட்டார். இதனால், பதறிப் போனவர், அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த சூழ்நிலையில் தான் அந்த சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர், அந்த சிறுமியை தேடி சென்றுள்ளார். வயல்வெளியில் பேச்சு மூச்சின்றி கிடந்த அந்த சிறுமியை, அவரை தேடிச் சென்ற மற்றொரு சிறுமி மீட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்பு அந்த சிறுமியை மீட்டு வந்த மற்றொரு சிறுமி, இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது தங்களுடைய மகள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து, இது பற்றி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த கொத்தனாரை அதிரடியாக கைது செய்தனர்.