பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Apprentices பணிகளுக்கு 6160 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 20 முதல் 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் செப்டம்பர் 29-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For More Info : https://sbi.co.in/documents/77530/36548767/310823-ENGAGEMENT+OF+APPRENTICE+2023+ADVERTISEMENT+CRPD_APPR_2023-24_17.pdf/fb7c7b06-3c72-4c55-cd2b-1c9bb