பால் மற்றும் பேரீச்சம்பழம் சேர்த்து குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பால் மற்றும் பேரீச்சம்பழம் ஆகிய இரண்டும் தனித்தனியாகவே பல்வேறு சத்துகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை கொண்டவை ஆகும். ஆனால், இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொண்டால், பயன்கள் இன்னும் அதிகம். குறிப்பாக, இது உடலுக்கு தேவையான சக்தியையும், சுறுசுறுப்பையும் வழங்கும். அதேசமயம், சில உடல்நலப் பிரச்சனைகளை சரிசெய்ய முக்கிய காரணமாகவும் உள்ளது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கிய வாழ்கைக்கு துணையாக அமையும். மேலும், ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
பேரிச்சம்பழம், அதன் இயற்கை சர்க்கரை வகைகளான ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சர்க்கோஸின் காரணமாக உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் விரைவில் ஆற்றலை வழங்குகிறது. இதனால், ஆண்கள் உடலுறவுக்கு முன் இந்த பழத்தை வெதுவெதுப்பான பாலும் சேர்த்து எடுத்துக்கொண்டால், சோர்வின்றி புத்துணர்வுடன் இருப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
விந்தணு தரத்தை மேம்படுத்தும் சத்துகள் :
பேரிச்சையில் காணப்படும் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் B6 போன்ற மூலப்பொருட்கள், ஆண்களுக்கான முக்கிய ஹார்மோன்கள், குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு ஆதரவாக உள்ளன. இதனால், ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை மாறுபடும்.
சீரான இரத்த ஓட்டம் :
இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவுகின்றன. இதனால், இரத்த ஓட்டம் மேம்பட்டு, உடலுறவின்போது தேவையான உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது. இது செயல்திறனை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்கிறது.
ஆயுர்வேதம் :
பேரிச்சை மற்றும் பாலை சேர்த்து குடிப்பது, ஆயுர்வேதத்தில் நீண்டகாலமாக உடல் வலிமையை அதிகரிக்கும் ஒரு நம்பகமான முறையாகும். இது உடலுக்கு சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் வழங்குவதோடு, ஆண்களின் உடலுறவு ஆரோக்கியத்தையும் பலவீனமின்றி மேம்படுத்தும் சக்தி கொண்டது. முன்கூட்டியே விந்து வெளியேறுதல், விறைப்புத்தன்மை குறைபாடு அல்லது செக்ஸ் இச்சை குறைவு போன்ற பிரச்சனைகளில் இது இயற்கையாக தீர்வு தரும். மேலும், நீண்ட நேரம் நிலைத்திருக்கும் ஆற்றலை வழங்கும்.
பாலிலும் பேரிச்சம்பழத்திலும் இயற்கை சத்துகள் நிறைந்திருந்தாலும், இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. குறிப்பாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பால் அல்லது நட்ஸ் அலர்ஜி கொண்டவர்கள், அல்லது ஏதேனும் குறைபாடுகள் அல்லது மருத்துவ நிலை காரணமாக உணவுகளில் கட்டுப்பாடுகள் உள்ளவர்கள், இதனை தவிர்ப்பது நல்லது.