இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், உடல்பருமன் என்பது பெரும்பாலானோருக்கு பெரிய சவாலாகவே மாறியுள்ளது. இதை கட்டுப்படுத்த சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது போன்ற சில டயட் முறைகள் இப்போது பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. மேலும், சர்க்கரையை தவிர்ப்பதால் உடல் எடைக் குறைப்பு மட்டுமல்ல, அதைவிட மேலான பல நன்மைகளும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றன.
மேலும் தேநீர், காஃபி போன்ற பானங்களில் சர்க்கரையை தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் அடிக்கடி சாப்பிடும் ஐஸ்கிரீம்கள், பாக்கெட் உணவுகள் இவைகளில் உள்ள மறைமுகமான சர்க்கரை மற்றும் உப்பு அளவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உணவில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, வெறும் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக மட்டுமின்றி, இது உடலை பலவிதமான வீக்கம், அழற்சி மற்றும் ஆபத்தான நோய்கள் (மாரடைப்பு, நீரிழிவு, பக்கவாதம்) போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள் :
* ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம் குறையும்
* இதய நோய்கள் மற்றும் நீரிழிவு அபாயம் குறையும்
* மன அழுத்தம், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக இருக்கலாம்
சர்க்கரை தேவையா? இல்லையா? :
சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது அனைவருக்கும் தேவையில்லை. உடலுக்கு தேவையான அளவு சர்க்கரையை இயற்கை வழிகளில் கூட பெறலாம். உதாரணத்திற்கு பழங்கள், தேன், பேரிச்சம்பழம் ஆகியற்றில் இயற்கையான சர்க்கரை உள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரை :
* தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிய நடை மேற்கொள்ள வேண்டும்.
* தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தேநீர், காஃபி போன்ற பானங்களை அளவோடு சாப்பிட வேண்டும்.
Read More : கலப்பட பாலில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கீங்களா..? இது தெரியாம இனி பால் வாங்காதீங்க..!!