திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் வட்டமடித்த நிலையில், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) திருவனந்தபுரத்திலிருந்து புது டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானக் குழுவினர் கண்டறிந்தனர். இதனால் உடனடியாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. விமான எண் A12455 சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், விமானம் குறித்து தேவையான விசாரணை நடத்தப்படும் என்றும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உட்பட பல எம்.பி.க்களும் இந்த விமானத்தில் இருந்தனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் உள்ள எங்கள் சக ஊழியர்கள் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க உதவி செய்து வருகின்றனர், மேலும் பயணிகளை விரைவில் அவர்களின் இலக்கை அடைய மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். பல எம்.பி.க்களும் இந்த விமானத்தில் இருந்தனர்.
இதுகுறித்து, மூத்த காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் தனது Xதள பதிவில், திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் எண் AI 2455, என்னையும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நூற்றுக்கணக்கான பயணிகளையும் ஏற்றிக்கொண்டு இன்று பயங்கரமான துயரத்தை நெருங்கிச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நாங்கள் முன்னெப்போதும் இல்லாத கொந்தளிப்பை எதிர்கொண்டோம்.
நடுவானில் 2 மணி நேரம் வட்டமிட்ட விமானம்: சுமார் ஒரு மணி நேரம் கழித்து விமான சிக்னலில் கோளாறு இருப்பதாக கேப்டன் அறிவித்து விமானத்தை சென்னை நோக்கி திருப்பிவிட்டதாக வேண்கோபால் கூறினார். தரையிறங்க அனுமதிக்காக சுமார் இரண்டு மணி நேரம் நாங்கள் விமான நிலையத்தைச் சுற்றிக் காத்திருந்தோம். அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்த நேரத்தில் உடனடியாக நிறுத்த கேப்டன் எடுத்த முடிவு விமானத்தில் இருந்த அனைவரின் உயிரையும் காப்பாற்றியது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதுபோன்ற தவறு மீண்டும் நடக்கக்கூடாது: விமானியின் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம், ஆனால் பயணிகளின் பாதுகாப்பு அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்க முடியாது என்று அவர் கூறினார். இந்த சம்பவத்தை உடனடியாக விசாரித்து, பொறுப்புணர்வை சரிசெய்து, இதுபோன்ற தவறு மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு டிஜிசிஏ மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
விமானத்தில் இருந்த எம்.பி.க்கள் யார்? செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் படி, இந்த ஏர் இந்தியா விமானத்தில் கேரள எம்.பி.யும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கே.சி.வேணுகோபால், யு.டி.எஃப். ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே. சுரேஷ், கே. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக எம்.பி. ராபர்ட் புரூஸ் ஆகியோர் பயணம் செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: திமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி.. EPSக்கு ஷாக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!