கல்லூரி மாணவிக்கு பிறந்த ரகசிய குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீச முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஊட்டியில் பி.எஸ்.சி. பட்ட படிப்பு படித்துள்ளார். இவர், அங்கு படித்து வந்தபோது, மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 ஆண்டுகளாக ஊட்டியில் சுற்றி வந்தனர். மேலும், ரகசிய திருமணமும் செய்து கொண்டு, இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார்.
அந்த கர்ப்பத்தோடு, அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிப்பு வந்த நிலையில், காதல் கணவனும் சென்னைக்கு குடியேறினார். இவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்கிடையே, மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தர். ஆனால், மாணவியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்து சக மாணவிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
ஆனால், வயிற்றில் கட்டி இருப்பதாகவும், இதற்கு நாளடைவில் பெரிதாகி வருவதாகவும், இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த மாணவி விளக்கம் அளித்தார். இதற்கிடையே, சக மாணவிகள் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டதால், அந்த மாணவி மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, அங்கேயே ஆண் குழந்தையை பிறந்தது.
ஆனால், பயத்தில் தனது காதல் கணவனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, மாணவியையும், குழந்தையையும் திருவல்லிக்கேணி பகுதிக்கு அழைத்து வந்த கணவன், லாட்ஜில் தங்க வைத்தார். பின்னர், குழந்தையை என்ன செய்வது என இருவரும் யோசித்தனர். இதையடுத்து, இருவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர். அதன்படி, குழந்தையை ஒரு கட்டைப்பையில் போட்டனர். பின்னர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்ற இருவரும், அந்த பையை அங்கு தூக்கிப் போட்டுவிட்டு, தப்பிக்க முயன்றனர்.
ஆனால், சந்தேகத்திற்கிடமாக இருவரும் அங்கு சுற்றித்திருந்ததால், அங்கிருந்த காவலர் ஒருவர், அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, குப்பைத் தொட்டியில் குழந்தை ஒன்று அனாதையாக இருந்ததாகவும், அதை மருத்துவமனைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், அவர்களை அந்த காவலர் நம்பவில்லை. பின்னர் கிடுக்குப்பிடி விசாரணையில், அந்த குழந்தை தங்களுக்கு பிறந்தது என இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, அந்த குழந்தை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மாணவி அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ரகசிய காதல் கணவன், கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மாரடைப்பு வராது..!! ஏன் தெரியுமா..? மருத்துவர்கள் சொல்லும் காரணம்..!!