ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய அளவில் வசூல் செய்து, அதன் முழு பட்ஜெட்டையும் கிட்டத்தட்ட மீட்டெடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. ஆனால் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, கூலி ஏற்கனவே நிதி ரீதியாக மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளது. ரூ.375 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கூலி, வெளியீட்டிற்கு முன்பே அதன் பட்ஜெட்டில் 66 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. கூலி படம், சர்வதேச, டிஜிட்டல், இசை மற்றும் செயற்கைக்கோள் உரிமைகள் விற்பனை மூலம் சுமார் ரூ.250 கோடியை ஈட்டியுள்ளது என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. மேலும் சர்வதேச விநியோக உரிமைகள் மூலம் மட்டும் ரூ.68 கோடியை ஈட்டியுள்ளது.
அதே போல் கூலி படத்தின் வெளிநாடு முன்பதிவுகள் ஏற்கனவே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.30 கோடியை ஈட்டியுள்ளன. அதாவது இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் திரையரங்குகளில் முதல் பார்வையைப் பெறுவதற்கு முன்பே கூலி கிட்டத்தட்ட ரூ.280 கோடியை வசூலித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த படம் சர்வதேச சந்தையில் சாதனைகளை முறியடிக்கும் பாதையில் உள்ளது என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலை தொடர்ந்தால், லியோவின் (66 கோடி) வெளிநாட்டு தொட்ட நாள் எண்ணிக்கையை கூலி முறியடிக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன.. இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் ஒரு தமிழ் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய முதல் நாள் வசூல் சாதனையாகும்.
தென்னிந்தியா முழுவதும் கூலி படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.. கேரளா மற்றும் கர்நாடகாவில், திரையரங்குகள் காலை 6 மணிக்கே சிறப்பு காட்சிகளை அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில், அரசாங்க விதிமுறைகளின்படி முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி மாஸ், ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..
கூலி படத்தின் ப்ரீ ரிலீஸ் வணிகம், அசாதாரண முன்பதிவுகள் என கூலி படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ஓபனிங்கிற்கு தயாராகி உள்ளது. ரசிகர்களும் இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்..
Read More : நடிகர் பிரசாந்த் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..? மனைவியால் நடுங்கிப்போன குடும்பம்..!!