உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு திருமணம் ஆகியும் குழந்தை இல்லாததால், மனைவிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்த கணவருக்கு கடைசியில் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண வாழ்க்கை என்பது கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் புரிந்துணர்வும் கொண்டு இணைந்த வாழ்க்கை ஆகும். ஏதாவது சிக்கல்கள் வந்தாலும் பொறுமையாக அணுகி, பேசிக்கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அனைவருக்கும் நினைத்தது போல அமையாது. சிலர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி ஏற்பட்டு 2ஆம் திருமணம் செய்யும் நிலைமைக்கு கூட தள்ளப்படுவார்கள்.
சிலர் சட்டப்படி விவகாரத்து பெறுவார்கள். இன்னும் சிலர், மத வழக்கப்படி, 2ஆம் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், எத்தனை திருமணம் செய்தாலும் கணவன் – மனைவி ஒத்துமையுடம், புரிந்து கொண்டு இருந்ததால், அந்த வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லையென்றால், வாழ்க்கையே நரகமாகும். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே பசன்கஞ்ச் கச்னாவ் என்ற கிராமம் உள்ளது. இங்கு அன்சார் அகமது (38 வயது) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது. முதல் மனைவியின் பெயர் சபேஜூல். 2-வது மனைவியின் பெயர் நஸ்னீன் பானு. அன்சார் அகமது இரண்டு திருமணங்கள் செய்தும் குழந்தைகள் இல்லை.
இதனால், அன்சார் இரண்டு மனைவிகளிடமும் அடிக்கடி தகராறு செய்து வருவாராம். குறிப்பாக, இரண்டாவது மனைவி நஸ்னீன் பானுவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். அதன்படி, சம்பவத்தன்றும் குழந்தை பிறப்பது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மனைவி பானு, தனது கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் துண்டித்துள்ளார். கோபத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, அந்தரங்க உறுப்பை துண்டித்தபோது, கணவர் வலியால் அலறி துடித்துள்ளார்.
பின்னர், அன்சாரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அன்சாரியை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் அன்சாரியின் 2-வது மனைவி பானுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.