fbpx

70 வயதில் மூன்றாவது திருமணம் செய்த WWE வீரர் ஹல்க் ஹோகன்..!! மனைவிக்கு இத்தனை கோடியில் மோதிரமா..?

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். 70 வயதான இவர் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 1983இல் லிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், 2009ஆம் ஆண்டு அவரை பிரிந்தார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஜெனிபர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், அவரையும் பிரிந்தார்.

இந்நிலையில் ஹல்க் ஹோகன் 45 வயதான யோகா பயிற்சியாளரான ஸ்கைடெய்லி என்பவரை 3-வதாக திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது ஸ்கைடெய்லிக்கு $500000 மதிப்புள்ள மோதிரத்தை பரிசாக கொடுத்துள்ளார். அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதைப்பார்த்த ஹல்க் ஹோகனின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Chella

Next Post

தயவு செஞ்சி எங்கள வாழ விடுங்க....! கையெடுத்து கும்பிட்ட மனைவி, கணவர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு, கடைசியில் என்ன நடந்தது தெரியுமா....?

Mon Sep 25 , 2023
பொதுவாக தன்னுடைய மனைவி வேறு ஒருவரை விரும்புகிறார் என்று தெரிய வந்தால், அவரை தான் விரும்பியவரோடு சேர்த்து வைக்கும் கதை எல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். அது ஒரு சில சமயங்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனாலும், அப்படி ஒரு சம்பவம் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெற்று உள்ளது. திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி வேறொருவரை காதலித்துள்ளார் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து, அந்த பெண்ணின் […]

You May Like