JOB: பரோடா வங்கியில் வேலை.. ரூ.93,960 சம்பளம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Bank Jobs Recruitment.jpg 1

பரோடா வங்கியில் சேல்ஸ் மற்று வேளாண் விற்பனை துறையின் கீழ் உள்ள 417 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியின் விவரங்கள்:

மேனேஜர் (Sales) – 227
அதிகாரி (Agriculture Sales) – 142
மேனேஜர் (Agriculture Sales) – 48
மொத்தம் – 417

வயது வரம்பு: சேல்ஸ் பிரிவு மேனேஜர் பதவிக்கு குறைந்தப்பட்சம் 24 முதல் அதிகபடியாக 34 வயது வரை இருக்கலாம். விவசாயப்பிரிவு அதிகாரி பதவிக்கு குறைந்தபட்சம் 24 முதல் அதிகபடியாக 36 வயது வரை இருக்கலாம். விவசாயப்பிரிவு மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 26 முதல் அதிகபடியாக 42 வயது வரை இருக்கலாம்.

சேல்ஸ் மேனேஜர் கல்வித்தகுதி:

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு
  • MBA / மார்க்கெட்டிங் / சேல்ஸ் / வங்கி தொடர்பான PG டிப்ளமோ பெற்றிருப்பது விருப்பம்
  • குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

அதிகாரி / மேனேஜர் கல்வித் தகுதி: பின்வரும் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு அவசியம்:

  • வேளாண்மை
  • தோட்டக்கலை
  • கால்நடை அறிவியல்
  • பால்வளம் அறிவியல்
  • மீன்வள அறிவியல் / மீன்வளர்ப்பு
  • வேளாண் சந்தைப்படுத்தல் & ஒத்துழைப்பு
  • ஒத்துழைப்பு & வங்கி
  • வேளாண்-வனவியல் / வனவியல்
  • வேளாண் உயிரி தொழில்நுட்பம் / பி.டெக். உயிரி தொழில்நுட்பம்
  • உணவு அறிவியல் / உணவு தொழில்நுட்பம்
  • பால்வள தொழில்நுட்பம்
  • வேளாண் பொறியியல்
  • பட்டு வளர்ப்பு
  • மீன்வள பொறியியல்

மேலும் சேல்ஸ் / மார்க்கெட்டிங் / விவசாயம் / கிராமப்புற மேலாண்மை / நிதி ஆகியவற்றில் 2 ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருப்பது விருப்பம். இதில் அதிகாரி பதவிக்கு குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் மற்றும் மேனேஜர் பதவிக்கு 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

சம்பள விவரம்: அதிகாரி பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.48,480 முதல் அதிகபடியாக ரூ.85,920 வரை வழங்கப்படும். மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் அதிகபடியாக ரூ.93,960 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: “நண்பா.. மீண்டும் வந்துவிடு” துள்ளுவதோ இளமை பட நடிகருக்கு உதவிய நடிகர் தனுஷ்..!!

English Summary

Bank of Baroda has issued an employment notification to fill 417 vacancies under the Sales and Agricultural Sales Department.

Next Post

முட்டைகளுக்காக கூடு கட்டும் ஒரே பாம்பு!. சாப்பிடாமல் ஒரு மாதம் உயிர்வாழும்!. ராஜ நாகம் பற்றி தெரியாத உண்மைகள்!.

Tue Aug 12 , 2025
உலகிலேயே மிக நீளமான மற்றும் மிகவும் விஷமுள்ள பாம்பு ராஜ நாகம். இது 20-25 ஆண்டுகள் வாழக்கூடியது மற்றும் முட்டைகளுக்காக கூடு கட்டும் ஒரே பாம்பு இது. இது மரங்களில் ஏறவும், நீந்தவும், மற்ற பாம்புகளை வேட்டையாடவும் முடியும். பாம்புகள் மீது மக்களுக்கு பெரும்பாலும் பயமும் ஆர்வமும் இருக்கும். குறிப்பாக ராஜநாகம் போன்ற விஷப் பாம்பைப் பொறுத்தவரை, பயம் மேலும் அதிகரிக்கிறது. அதன் நீளம், பேட்டை விரிக்கும் பாணி மற்றும் […]
king cobra 11zon

You May Like