தமிழ் சினிமா என்றாலே கதாநாயகர்கள் மட்டுமல்ல, கதாநாயகிகளுக்கும் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் திரையுலகை ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்த நடிகைகள், ரசிகர்களின் மனங்களில் என்றும் நிறைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் 1980களில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி, ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அம்பிகா.
மலையாள சினிமா மூலம் 1979-ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர், 1980களில் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த இவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றார்.
அம்பிகா நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் மிக்கவை. கதைக்கு தேவையான உணர்வுகளை மனதார உணர்ந்து, அவற்றை உயிரோடு வெளிப்படுத்துவதில் அவர் சிறந்தவர். தற்கால நடிகைகள் கூட தயங்கும் பலவிதமான கடினமான பாத்திரங்களை அவர் தைரியமாக ஏற்று நடித்ததாக ரசிகர்கள் இன்றும் பெருமை கொள்கின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் சாராயம் விற்றுக் கூடிய பெண்ணாக நடித்திருப்பார் அம்பிகா. அப்படம் வெற்றிப் பாதையில் சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது அம்பிகா தான் என்று கூறப்படுகிறது. அதேபோல, பாக்யராஜ் இயக்கிய ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நகைச்சுவை உணர்வும், இயல்பான நடிப்பும் ரசிகர்களை ஈர்த்தது.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், சுஹாசினி விருது வழங்கியபோது, “சகலகலா வல்லவன் படத்தில் கமலின் நடிப்பை விட அம்பிகாவின் முகபாவனைகளும் உணர்வுகளும் எனக்கு மிகவும் பிடித்தது” என்று பாராட்டினார். அதற்குப் பதிலளித்த அம்பிகா, “அவர் (கமல்) என்னை உண்மையிலேயே கெட்ட வார்த்தையால் திட்டினார். அதனால் தான் அந்த உணர்வுகள் வந்தது” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
அவன் இவன் போன்ற திரைப்படங்களில் விஷால் உள்ளிட்ட இளைய தலைமுறையினருடன் பணியாற்றிய அம்பிகாவின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது. ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர், இன்று சின்னத்திரையிலும் தனது அர்ப்பணிப்புடன் பயணித்து வருகிறார். அம்பிகா நடிகை மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு நுட்பமான நடிப்பினால் ரசிகர்களின் மனங்களை வென்றனர்.
Read More : தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீர் இப்படித்தான் உருவாகிறதா..? இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்..!!